........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 729

மறுபடியும் உருவாக...!

அறிந்தும் அறியாத
உயிராய்-
என்
இதயம்
மறவாத
உறவாய்
ஏன் ஆனாய்?

கலப்பற்ற மெய்
சொல்லுகின்ற உயிரே
குழப்பத்தை ஏன்தந்து
கொல்லுகின்றாய்?

உன் பரிபாசை
தெரியாமலும்
நான் இல்லை..
என் மன ஓசைகள்
அறியாமலும்
நீ இல்லை..

நீதான்
எழுத நினைத்தாய்
என் கதையை-
முற்றுப் புள்ளியையும்
வைத்து விடு
நீயே..!

இனி எதைத்தான்
நான்
ஆரம்பிக்க?
முழுதாய்
உன்னுள்
அமிழ்ந்து விட்டேன்!

உயிரே
கதை எழுது..
என்
உறக்கத்தை
திருப்பிக்கொடு-

மறுபடியும்
தூங்க வேண்டும்
நிம்மதியாக.

இன்றைய நீயும்
இன்றைய நானும்
இனி வேண்டாம்-

நேற்றைய நாமாய்
உருவாகுவோம்
மறுபடியும்!

-சம்பூர் சனா.

 

 

 

 

 

 

 

m

 

சம்பூர் சனா அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

 <