........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 736

என் காதலி?

விழியில் வாளேந்தி
மொழியில் தேனேந்தி -  என்
வழியில் விளக்கேந்தி வந்தாள்!
காதல் கருவாகி
கருத்தில் நிழலாடி - பொழியும்
கார்மேக உருவே!
வெயில் ஒளியாகி
வெண்மதி குளிராகி - தண்மதி
வெண்பனி உயிரானாள்!

கண்மேக நிலவை
காரிகை கூந்தல் மூடி
களி நடனமாடும்!

திருப்பாவை ஆண்டாளோ
திருமேனியன் மனையாளோ
திருத்தணிகையான் சேர்ந்த
திருக்குறத்தி இவள்தானோ!

சுண்ணாம்பு சேராத வெற்றிலையோ
சுடரில் கரையாத கற்பூரமோ
சூரியன் பார்க்காத மொட்டோ
சுந்தரி தெய்வீக மெட்டோ!

இதயகோயில் தீபமே
இருட்டறை தெய்வமே
இசைந்தால் உயிர் வாழ்வேன்!

-விஷ்ணுதாசன்.

 

 

 

 

 

 

 

m

 

விஷ்ணுதாசன் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு