........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 744

காதல் வைரஸ்...!

உன் முகத்தை பார்க்காமல் இருந்த
பொழுதுதான் தோன்றியது
உன்னுடைய காதல்!

உன் நினைவினை
மறக்கும் போதுதான்
தோன்றியது உன்
காதலின் ஆழம்!

உன்னை மறக்க
நினைக்கும் போது தான்
தோன்றியது உன்
காதலின் வலிமை!

என் கண்ணை மறைத்து
இதயத்தைக் கெடுத்து
மனத்தைச் செயலிழக்க
செய்யும் இந்த வைரஸை
ஏன் என்னுள் செலுத்தினாய்?

இந்த வைரஸ்க்கு திருமணம்
தான் சரியான ஆண்டிவைரஸாமே
உண்மையா... ?
கம்ப்யூட்டர் இஞ்சினியர்களே..!
கொஞ்சம் சோதித்துச் சொல்லுங்கள்!!

-மு. சந்திரசேகர், இராஜபாளையம்.

 

 

 

 

 

 

 

m

 

மு.சந்திரசேகர் அவர்களின் மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு