........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:86

பொங்கல் திருநாள்

தங்கத் திருநாளாம்
தமிழர் திருநாள் - ஜனவரி 15
பொங்கல் திருநாள்...

ஏர்பூட்டும் உழவனை
சீர்தூக்கி நிறுத்தும் திருநாளாம்
பொங்கல் திருநாள்...

உழைப்பிற்கு நன்றி நவில
தமிழனுக்கோர் திருநாளாம்
பொங்கல் திருநாள்...

பார் போற்றும் செந்தமிழின்
வெற்றித் திருநாளாம்
பொங்கல் திருநாள்...

நாட்டிற்கு உழவன் இல்லையேல்
வீட்டிற்கு ஏதடா சோறு
செந்தமிழாம் சங்கத்தமிழ் நாட்டினிலே
பசுவைக் கொண்டாடும் திருநாளாம்
பொங்கல் திருநாள்...

நீ ... நான் ... நாம்
தமிழனென்று சொல்லும் திருநாளாம்
பொங்கல் திருநாள்...

தமிழின் தமிழனின் கலாசாரத்தை
பறைசாற்றி உலகமெங்கும்
வாழும் தமிழர்
பொங்கல் திருநாளைக்
கொண்டாடி மகிழ்வோம் !

-த.சத்யா, இராஜபாளையம்.  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

m
 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள்

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.