........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:87

மரியாதைக்குரியவர்களே...!

என் மரியாதைக்குரியவர்களே
வணக்கம்!

எங்கள் விருந்தில்
நீங்களில்லை

எங்கள் வீட்டு
மங்கல விழாக்களிலும்
இல்லை

கோவில் திருவிழாவிலும்
நீங்கள்
ஒரு கோடியில்

எங்கள் துக்கத்திற்காகத்
தூதுபோன உங்கள்
வியர்வையில் விளைந்தவை
எங்கள் வீட்டுக்குள்!
நீங்கள்
எங்கள் வாசற்படியோடு சரி

உங்கள் சுதந்தரம்
உங்கள் கனவு
உங்கள் கற்பனை
உங்கள் வாழ்க்கை
நாங்கள் விரித்த இருட்டுக்குள்

நாங்கள்
தலைவர்கள்
தெய்வங்கள்
என்றைக்கும் உங்களுக்காக இல்லை

நாலாவது இடத்திலிருக்கும்
உங்களை
நடுவில் வைத்துப்பார்க்க
எந்த மதங்கள் அழைத்தாலும்
மசியவில்லை
உங்கள் மனம்

மதம்
மக்களுக்கு ஓவியம் என்று
லெனின் சொன்னது தெரியுமோ!

மதங்களில்
எந்தமதம் நல்லமதம்?
கவிஞர் இளவேனில் எழுதியதும் தெரியுமோ!

உங்களை நோக்கி
மண்டியிடுகிறேன்
மதம் மாறாததற்காக அல்ல
மதம் பிடிக்காததற்காக

மதப்பற்றே இல்லாத
நீங்கள்தான் என்
மரியாதைக்குரியவர்கள் !

-பிச்சினிக்காடு இளங்கோ, சிங்கப்பூர்.  

 

m
 

பிச்சினிக்காடு இளங்கோ அவர்களின் இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.