........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:93 

சிரித்துப் பார்...!

அடிமனதின் அழுத்தத்தை
அறவே அகற்றிடும்
அமிர்தம்!

நெஞ்ச பாரத்தைக்
கொஞ்சம் குறைத்திடும்
வலி நிவாரணி!

பதற்றத்தையும்
படபடப்பையும் போக்கிடும்
புகை போக்கி!

சிந்தனைக் குதிரைகளை
சீரிப் பாயச் செய்திடும்
சிறப்பு மருந்து!

அக்னி வெயிலின்
உக்கிரத்தைக் குறைத்திடும்
தர்ப்பூசணி!

சூறாவளிக் காற்றில்
சுழன்றிடும் வாழையைத் தாங்கும்
சவுக்கு மரம்!

அழுபவனையும்
ஆனந்தத்தில் மூழ்கடிக்கும்
அன்னை மடி!

அதுதான் சிரிப்பு!
நீயும் சிரித்துப்பார்!!
சிறகடித்துப் பறந்து பார்!!

-ஜான் பீ. பெனடிக்ட், வாசிங்டன் DC

 
m
 

ஜான் பீ.பெனடிக்ட் அவர்களின் இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.