........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:96

அவசரமில்லாமல்...

மழலைகள்,
மயக்கும் கவிதைகள்!
மனிதா உனக்கு நேரம் இருக்கிறதா?
வாசித்து மகிழ!

மலரும் புதுப்பூக்கள்!
மனிதா உனக்கு நேரம் இருக்கிறதா?
பார்த்து இரசிக்க!

சிரிக்கும் கடவுள்கள்!
மனிதா உனக்கு நேரம் இருக்கிறதா?
வரம் கேட்க!

அவர்களைப்,
பிஞ்சிலே பழுக்க வைக்க,
அஞ்சிலே அனைத்தும் கற்க,
ஆசைதான் பெற்றோர் நமக்கு!

அது,
நஞ்சினை விதைப்பதாகும்!
நம்பிள்ளைக்கது கெடுதியாகும்!

அவர்களை,
நம்பர் ஒன் ஆகச்சொல்லி
நையப்புடைக்க வேண்டாம்!

மதிப்பெண்ணால் மதிப்பிட்டு
மலர்களைக் கசக்க வேண்டாம்!

புத்தகச் சுமைகள் ஏற்றிப்
பொதிகழுதை ஆக்க வேண்டாம்!

முடிந்தால்,
நாமும் நேரம் ஒதுக்கி ஓடி விளையாடுவோம்!
குழந்தையாகிக் கூடி விளையாடுவோம்!

இந்த அவசர உலகுக்குள்
அவர்கள்
அவசரமில்லாமல் நுழையட்டும்!

- இராம. வயிரவன், சிங்கப்பூர்.

 
m

 

இராம.வயிரவன் அவர்களின் இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.