........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குறுந்தகவல்-101

தண்ணீர் குடிக்காத மிருகம்

  • அமெரிக்க ஜனாதிபதிகளில் புலிட்சர் விருதினை பெற்ற ஒரே ஒருவர் ஜான் எப்.கென்னடிதான்.

  • லினஸ் பாலிங் வேதியியலுக்கான நோபல் பரிசை 1954 ஆம் ஆண்டிலும், சமாதானத்திற்கான நோபல் பரிசை 1962 ஆம் ஆண்டிலும் பெற்றார். இரண்டு வெவ்வேறான பிரிவுகளில் நோபல் பரிசினை பெற்ற ஒருவர் இவர்தான்.

  • உலகில் மிக நீளமான பாலம் சைனாவில் உள்ளது. இது 43.4 கி.மீ நீளம் கொண்டது.

  • நைல் நதி 7088 கி.மீ தொலைவு கொண்ட மிக நீளமான நதி என்பதுடன் உலகிலேயே மிக நீளமான நதி என்கிற பெருமைக்குரியதாகும்.

  • சந்திரனில் இதுவரை 12 நபர்கள் கால் பதித்துள்ளனர்.

  • அமெரிக்க ஜனாதிபதிகளில் 15 வது ஜனாதிபதியாக இருந்த ஜேம்ஸ் பக்னான் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தவர்.

  • அவுஸ்திரேலியாவில் மட்டுமே காணக்கூடிய பாலூட்டி வகையைச் சேர்ந்த கோவாலாக் கரடி தண்ணீர் குடிப்பதில்லை. தமக்குத் தேவையான நீரை தாம் வசிக்கும் யூக்கலிப்ஸ் மரங்களின் இலைகளிலிருந்தே பெறுகின்றன.

  • “காட்விட்’ என்ற பறவை, உண்ணாமல், உறங்காமல், ஓய்வெடுக்காமல் தொடர்ந்து 11 ஆயிரம் கி.மீ. தூரம் வரை பறக்கக் கூடியவை.

  • சுத்தமான தண்ணீர் மின்சாரத்தைக் கடத்தாது. அதில் வேறு தாதுக்கள் கலந்திருந்தால் மட்டுமே மின்சாரம் கடத்தப்படும்.

  • சாகும் வரை வளர்ந்து கொண்டே இருக்கும் ஒரே உயிரினம் முதலைதான்.

  • பிரான்ஸ், மேற்கு ஜெர்மனியில் குழந்தைகளுக்கு நம் விருப்பம்போல் பெயர் வைக்க முடியாது. அரசாங்கம் வெளியிடும் பெயர் பட்டியலில் இருந்துதான் ஒரு பெயரை தேர்ந்தேடுக்க வேண்டும்.

  • நாய்க் குடும்பத்தைச் சேர்ந்த கரடி இரவில் சுறுசுறுப்பாக செயல்படும். மரங்களில் தலைகீழாக ஏறும். குளிர் காலத்தை தூங்கியே கழிக்கும். இதற்கு மோப்பசக்தி அதிகம். .

  • ஐ.நா வின் முதல் பொதுச் செயலாளர் நோர்வே நாட்டைச் சார்ந்த டிரைக்வேல்.

  • உலகமொழிகளில் வடமிருந்து இடமாக எழுதப்படும் மொழி உருது.

  • காரைக் கண்டுபிடித்தவரின் பெயர் குகாட்.

  • யோகா என்னும் சமஸ்கிருதச் சொல்லுக்கு ஒழுக்கம் என்று பொருள்.

தொகுப்பு: கணேஷ் அரவிந்த்.

கணேஷ் அரவிந்த் அவர்களின் இதர படைப்புகள

     முந்தைய குறுந்தகவல் காண

 

 

முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.