........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குறுந்தகவல்-102

தலைகீழாகத் தொங்கும் உயிரினம்

 • தென்மெரிக்காவில் காணப்படும் ஸ்லோத் (Sloth) எனப்படும் உயிரினம் தனது பெரும்பாலான வாழ்வை தலைகீழாகத்தான் வாழும். இவை கிளைகளில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டே உணவு தேடும்.

 • ஒரு புலி தனது மொத்த எடையில் ஐந்தில் ஒரு பகுதி எடை உணவை ஒரே முறையில் உண்ணும். இதற்கு சமமாக ஒரு சராசரி மனிதன் உண்ண வேண்டுமானால் அவன் ஒரு முறைக்கு பதினைந்து கிலோ எடை உணவை உண்ண வேண்டும்.

 • யானைகளைப் போல் தந்தங்கள் உள்ள மற்றொரு உயிரினம் கடலில் வாழும் வால்ரஸ் மட்டுமே.

 • விசில் அடிப்பது போன்ற ஒலியை உருவாக்கும் ஒரே உயிரினம் டால்பின்.

 • தங்கக் கழுகால் 3.2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள முயலையும் எளிதில் பார்க்க முடியும். பெரிக்ரின் பருந்து (peregeine falcon) எனும் பறவையால் 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புறாவையும் பார்க்க முடியும்.

 • நீரில் வாழும் Giant Squid எனும் உயிரினத்தின் கண்கள் நாற்பது சென்டி மீட்டர் இருக்கும். ஆழ்கடலில் வாழும் இவை ஒன்பது மீட்டர் நீளம் வரை வளரக்கூடியவை.

 • சிலவகை மூங்கில்களுக்கு வளர்ச்சி விகிதம் மிக அதிகம். ஒரு நாளைக்கு மூன்றடி, அதாவது 90 செ.மீ. உயரம் வளரும். வளர்ந்து முடிந்ததும் இவற்றின் உயரம் நாற்பது மீட்டர் கூட இருக்கும்.

 • வெட்டுக்கிளியின் காதுகள், அவற்றின் கால்களில் இருக்கின்றன.

 • விலாங்கு மீனால் மின் அதிர்ச்சியை ஏற்படுத்த முடியும்.

 • தேனீக்கள் எதிரிகளை ஒரு முறை மட்டுமே கொட்ட முடியும். ஏனெனில், அவை கொட்ட பயன்படுத்தும் கொடுக்குகள் கொட்டியதும் எதிரியின் உடலிலேயே தங்கிவிடும்.

 • பாப்புவா நியூ கினியா (Papua New Guinea)தான் உலகில் மிக அதிக மொழிகள் உள்ள நாடு. இதன் அரசு மொழியாக ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டாலும் இங்கு 715-க்கும் மேல் மற்ற மொழிகள் உள்ளன.

 • இருட்டைப் பார்த்து பயப்படும் நோய்க்கு நாக்டிஃபோபியா (Noctiphobia) என்று பெயர்.

 • உலகில் அதிக உப்பு நிறைந்த பெருங்கடல் அட்லாண்டிக் பெருங்கடல்தான்.

 • லிபோர்னியாவில் உள்ள டெத் வேலி (Death Valley) தான் உலகிலேயே மிகவும் வறண்ட பகுதி.

 • ஜனவரி 10-ம் தேதி உலக சிரிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.

 • இந்தியாவிலுள்ள "ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா" தான் உலகில் மிக அதிகமான ஊழியர்களைக் கொண்டுள்ள வங்கி.

 • எட்டி மெர்க்ஸ் (Eddy Merkx) என்ற பெல்ஜியம் நாட்டு சைக்கிள் வீரர் 445 சைக்கிள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இவர் டூர் டி பிரான்ஸ் (Tour de France) என்ற பிரான்ஸ் நாடு முழுவதும் சைக்கிளில் சுற்றி வரும் போட்டியில் நான்கு முறை வென்றுள்ளார்.

 • தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ் பெர்க்கில் உள்ள சுரங்கம்தான் உலகின் மிக ஆழமான சுரங்கம்

 • இங்கிலாந்து நாட்டை ஆண்டவர்களில் ஜேன் கிரே (Jane grey) ராணியாக இருந்தது ஒன்பது நாட்களுக்கு மட்டுமே.

 • உலகில் அதிகமாகத் திரைப்படங்கள் தயாரிக்கும் நாடுகளில் முதலிடம் பெற்றது இந்தியா.

தொகுப்பு: கணேஷ் அரவிந்த்.

கணேஷ் அரவிந்த் அவர்களின் இதர படைப்புகள

     முந்தைய குறுந்தகவல் காண

 

 

முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.