........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குறுந்தகவல்-104

பூரண ஆயுள் என்றால் எவ்வளவு?

  • ஈரான், ஈராக் நாடுகளின் பழைய பெயர்கள் முறையே பெர்ஷியா, மெஸபடோமியா.

  • இருட்டைப் பார்த்து பயப்படுவதை டாக்டர்கள் அக்ளூவோபோபியா (achluophobia) என்று சொல்வார்கள்.

  • முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான்.

  • உலகில் மிக நீளமான பாலம் சைனாவில் உள்ளது. இது 43.4 கி.மீ நீளம் கொண்டது.

  • உலகிலேயே மிக நீளமான நதி நைல் நதி. இது 7088 கி.மீ தொலைவு கொண்டது.

  • மீன் தன் வாழ்நாள் இறுதி வரை வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும்.

  • லினஸ் பாலிங் (Linus Pauling) என்பவர் வேதியியலுக்கான நோபல் பரிசை 1954 ஆம் ஆண்டிலும், சமாதானத்திற்கான நோபல் பரிசை 1964 ஆம் ஆண்டிலும் பெற்றார்.  

  • அட்லாண்டிக் பகுதியில் ஆண்டிற்கு ஒரு முறைதான் சூரியன் உதயமாகிறது.

  • அமெரிக்க ஜனாதிபதிகளில் 15 வது ஜனதிபதியான ஜேம்ஸ் பக்னான் (James Buchanon) என்பவர் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்தவர்.

  • மகாத்மதா காந்தி இந்தியாவில் மட்டுமல்ல தென்னாபிரிக்காவிலும் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார்.

  • பாப்புவா நியூ கினியா (Papua New Guinea) எனும் நாட்டில் அரசு மொழியாக ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டாலும் இங்கு 715க்கும் அதிகமான மொழிகள் பேச்சு வழக்கத்தில் உள்ளன.

  • கைரேகையை வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி

  • மனிதனின் கைரேகையைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

  • ஐ.நா- வின் அலுவலக மொழிகளான சீனம், ஆங்கிலம், ருசிய, பிரன்ச், ஸ்பானிஷ் ஆகியவற்றுடன் தற்போது அரபு, ஹிந்தி மொழிகளும் சேர்ந்துள்ளன.

  • பூரண ஆயுள் என்பது 120 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்வது.

  • ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.

-தொகுப்பு: கணேஷ் அரவிந்த்.

கணேஷ் அரவிந்த் அவர்களின் இதர படைப்புகள

     முந்தைய குறுந்தகவல் காண

 

 

முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.