........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

குறுந்தகவல்-115

கழுதைக் கண்காட்சி நடக்கும் இடம்!

  • முதன் முதலில் சாலைகளின் நடுவில் மஞ்சள் கோடு அமைத்து, சாலைகளை இடம் - வலமாகப் பிரித்து நடைமுறைப்படுத்தியது அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் மாகாணம்.

  • அமெரிக்க அதிபர்களில் பி.எச்.டி பட்டம் பெற்றிருந்தவர் உட்ரோ வில்சன் மட்டும்தான்.

  • நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை கண்களின் அளவு மாறுவதில்லை. மூக்கும் காதும் ஒருவன் இறக்கும் வரை வளர்ந்து கொண்டே இருக்கும்.

  • 1972 மே மாதம் சிலோன் ஸ்ரீ லங்கா என்று பெயர் மாற்றமடைந்தது.

  • 1900 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் முதன் முதலாக கிரிக்கட்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இறுதி முறையும் அதுவே.

  • டென்மார்க் கடல் மட்டத்திற்குக் கீழுள்ள நாடாகும்.

  • உலகிலேயே சிறிய மக்கள் தொகை கொண்ட நாடு பிட்கைர்ன் தீவுகள். இங்கே 9 குடும்பத்தை சேர்ந்த 48 பேர் மட்டுமே வாழ்கிறார்கள்.

  • திமிங்கலத்தின் உடலில் சுமார் 8 ஆயிரம் லிட்டர் ரத்தம் இருக்கும்.

  • “நேபன்தஸ் அட்டன்பரோகி’ என அழைக்கப்படும் தாவரம் அந்தத் தாவரத்தின் இலையின் மேல் அமரும் எலி, சிறு பூச்சி போன்ற உயிரினங்களை பிடித்துக் கொண்டு உண்டுவிடும்.

  • இந்தியாவில் உஜ்ஜயினி நகரில் ஆண்டுதோறும் கழுதைக் கண்காட்சி நடத்தப்படுகிறது.

  • காந்தியடிகளுக்கு 13 ஆம் வயதிலேயே திருமணம் நடந்துவிட்டது.

  • தபால்பெட்டிக்கு சிகப்பு நிறம் பூசும் வழக்கம் இங்கிலாந்தில் 1876 ஆம் ஆண்டில் தொடங்கியது.

  • நிலத்தில் ஒரு மைல் தூரத்திற்கு 5280 அடி. ஆனால் கடலில் 6080 அடி.

  • ஜப்பானிலுள்ள ஃபூஜியாமலை எனும் எரிமலை புண்ணியத் தலமாகப் போற்றப்படுகிறது.

  • ஸ்ரீரங்கம் கோயிலில் இறைவனுக்கு ரொட்டியை நைவேத்தியமாகப் படைக்கிறார்கள்.

  • ஜெய்ஹிந்த் எனும் வார்த்தையை உருவாக்கியவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்

  • செவ்வாய்க் கிரகத்திற்கு ஃபோபோஸ், டெய்மோஸ் எனும் இரு துணைக்கோள்கள் இருக்கின்றன.

  • பாக்டீரியன் என்ற ஒட்டகத்திற்கு இரண்டு கொண்டைகள் இருக்கும்.

  • முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும் விலங்கினங்கள் ஒவோவிப்போரஸ் எனப்படுகிறது.

  • உலகிலேயே மிக அகலமான அருவி கோன் அருவி. இதன் அகலம் 6.7 மைல்கள்.

-கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.

கணேஷ் அரவிந்த் அவர்களின் இதர படைப்புகள

     முந்தைய குறுந்தகவல் காண

 

 

முகப்பு