........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

குறுந்தகவல்-117

கண்களைத் திறந்து கொண்டு தும்ம முடியுமா?

 • ஒரு சராசரி மனிதனின் மூளையில் சுமாராக 100 பில்லியன் நரம்பு செல்கள் இருக்கும்.

 • மூளையில் இருந்து மற்ற இடங்களுக்கும், மற்ற இடங்களில் இருந்து மூளைக்கும் அனுப்படும் கட்டளைகள் சுமார் 170 மைல் (274 கி.மீ) வேகத்தில் அனுப்படுகின்றன.

 • கழுத்து பகுதியில் இருக்கும் கூரான எலும்பு ஆடம்ஸ் ஆப்பிள் என்று மருத்தவர்கள் செல்லமாக அழைப்பர்.

 • உடம்பில் முட்டுகள் இல்லாத பகுதி உங்கள் தொண்டையில் இருக்கும் ஹையாடு எலும்பு ஆகும்.

 • உங்கள் கண்களை திறந்து கொண்டு கண்டிப்பாக உங்களால் தும்ம முடியாது.

 • ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நமது வயிறு முகஸ் என்ற ஒரு விதமான திரையை உருவாக்கி நம் வயிறை பாதுகாக்கிறது.

 • நீங்கள் பேசும் போது சுமாராக 72 மாறுபட்ட தசைகள் வேலை செய்வதால்தான் உங்களால் சத்தத்துடன் பேச முடிகிறது.

 • உங்கள் சுவை உணர்வுகள் 10 நாட்களுக்கு ஒரு முறை இறந்து புதுப்பிக்கப்படுகின்றன.

 • நீங்கள் இருமும் போது உங்கள் வாயில் இருந்து வெளியேறும் அசுத்தமான காற்று தடைகள் இல்லாமல் இருந்தால் சுமார் 60 மைல் (96.5 கி.மீ) தூரம் வரை செல்லும்.

 • உங்கள் தொடை எலும்பு, வீடு கட்ட பயன்படும் கான்கிரீட்டை விட பலம் வாய்ந்தது.

 • நீங்கள் தும்மும் போது உடம்பில் அனைத்து இயக்கமும் நிறுத்தப்படுகிறது, உங்கள் இதயம் உட்பட.

 • உங்கள் உடம்பின் மிக சக்தி வாய்ந்த தசை உங்கள் நாக்கு.

 • பெண்கள் ஆண்களை விட இரண்டு மடங்கு வேகமாக கண் சிமிட்டும் சக்தி வாய்ந்தவர்கள்.

 • ஒருவர் ஒரு கண்ணின் பார்வை இழக்கும் போது அவரின் மொத்த பார்வை திறனில் 5/1 பங்கு மட்டும் அழியும், ஆனால் அவர் மொத்தமாக ஆழம் உணரும் திறனை இழந்து விடுகிறார்.

-ராசை நேத்திரன்.

ராசை நேத்திரன் அவர்களது பிற படைப்புகள்

     முந்தைய குறுந்தகவல் காண

 

 

முகப்பு