........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

குறுந்தகவல்-119

ஊழலில் முதலிடம் பெற்ற நாடு

  • அரியானா என்றால் கடவுளின் இருப்பிடம் என்று பொருள்.

  • சமையல் எரிவாயுக்கு இயற்கையில் வாசனை கிடையாது.

  • உலகில் தினமும் 80 லட்சம் மின்னல்கள் தாக்குகின்றன.

  • கேள்விக்குறியை முதன் முதலில் பயன்படுத்திய மொழி லத்தீன்.

  • இத்தாலியில்தான் அடகு வைக்கும் முறை அறிமுகமானது.

  • கப்பலின் மேல்தளத்துக்குத் தேக்கு மரம் தவிர வேறு எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை.

  • கங்காரு ஒரு குதிப்பில் 9 மீட்டர் தூரம் கடந்துவிடும்.

  • எகிப்து நாட்டில் முருங்கை மரம் கிடையாது.

  • சுவீடன் நாட்டில் இணையம் பயன்படுத்துபவர்கள் அதிகம் உள்ளனர்.

  • நயாகரா நீர்வீழ்ச்சி அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாடுகளின் எல்லையில் உள்ளது.

  • மனிதன் தன் வாழ்நாளில் 20 கிலோகிராம் தூசியைச் சுவாசிக்கிறான்.

  • யானை தும்பிக்கையில் 1000 கிலோ எடையுள்ள பொருளைக் கூடத் தூக்கிவிடும்.

  • இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி தி பிரிசிடென்சி பேங்க் ஆப் இந்தியா.

  • யானைகளின் வியர்வை சிகப்பு நிறத்தில் வெளியேறும்.

  • ஆக்டோபஸ் எனும் கடல் உயிரினம் அதை விட பத்து மடங்கு சிறிய அளவுள்ள இடைவெளியில் கூட உள்ளே புகுந்து வெளியே வந்து விடும்.

  • வெள்ளைச் சுறா மீனிற்கு கடலில் எந்த உயிரினமும் எதிரிகள் இல்லை.

  • சிங்கம் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் தூங்கக் கூடியது.

  • இந்தியாவில் உச்சநீதிமன்றம் 1764 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.

  • தமிழ்நாட்டின் கடற்கரையின் நீளம் 1076 கிலோ மீட்டர்.

  • கடற்கரை மணலில் நடக்க சிரமமாக இருப்பதற்கு குறைந்த உராய்வு விசையே காரணம்.

  • புலியின் உடலில் 100க்கும் மேற்பட்ட வரிகள் உள்ளன.

  • உலகில் ஊழலில் முதலிடம் பெற்ற நாடு நைஜீரியா.

  • பாம்புகள் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி விட்டன.

தொகுப்பு: கணேஷ் அரவிந்த்.

கணேஷ் அரவிந்த் அவர்களின் இதர படைப்புகள

     முந்தைய குறுந்தகவல் காண

 

 

முகப்பு