........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குறுந்தகவல்-84

தேசியக் கொடியில் துப்பாக்கி.

 • கடல் மட்டத்திற்கு கீழேயுள்ள நாடு - டென்மார்க்.

 • ஒவ்வொரு தனி ராஜ்யத்திற்கும் தனி அரசியல் சட்டம் உள்ள நாடு -அமெரிக்கா.

 • ஆறு குடியரசுகள் சேர்ந்த நாடு - யுகோஸ்லேவியா.

 • நிக்கல் அதிகம் கிடைக்கும் நாடு - கனடா.

 • முக்கால் மைல் நீளம் மட்டுமே கொண்ட ரயில்வே உள்ள நாடு - வாடிகன்.

 • உலகில் முதன் முதலாக மருத்துவமனை ஏற்படுத்திய நாடு - ரோம்.

 • பைசா கோபுரம் உள்ள நாடு - இத்தாலி.

 • ஐரோப்பாக் கண்டத்தின் மிகப் பெரிய நாடு - ரஷ்யா.

 • உயரமான நீர்வீழ்ச்சிகளை அதிகமாகக் கொண்ட நாடு - நார்வே

 • பட்டுத்துணி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு - ஜப்பான்.

 • வாசனைத் தபால்தலையை முதன்முதலில் வெளியிட்ட நாடு - தென்னாப்பிரிக்கா.

 • உலகில் திரையரங்குகள் இல்லாத நாடு - சவூதி அரேபியா.

 • 7083 தீவுகளைக் கொண்ட நாடு - பிலிப்பைன்ஸ்.

 • ராணுவமே காவல்துறைப் பணியை மேற்கொள்ளும் நாடு - பூடான்.

 • குற்றவாளிகள் பற்றிய விவரங்களை புத்தகத்திலும் பத்திரிகைகளிலும் வெளியிடாத நாடு - ஆப்கானிஸ்தான்.

 • உலகிலேயே பூக்கள் அதிகமாக விளையும் நாடு - நெதர்லாந்து.

 • ஆசிரியர் பயிற்சிக்கான கல்லூரியை தொடங்கிய முதல் நாடு - இங்கிலாந்து.

 • கேசோஹால் எனும் வாகன எரிபொருளை கரும்பிலிருந்து அதிகம் உற்பத்தி செய்யும் நாடு - பிரேசில்.

 • தனித்திருக்கும் கொள்கையைக் கடைப்பிடிக்கும் நாடு - சீனா.

 • முத்துத்தீவு என்று அழைக்கப்படும் நாடு -பக்ரைன்.

 • உலகில் மிக நீளமான (128 வரிகள்) தேசீய கீதம் கொண்ட நாடு - கிரேக்கம்.

 • உலகில் மிகக் குறைவான (4 வரிகள்) தேசீய கீதம் கொண்ட நாடு - ஜப்பான்.

 • தபால் தலையை வட்ட வடிவமாக வெளியிட்டுள்ள நாடு - மலேசியா.

 • உலகின் மிக உயரமான கலங்கரை விளக்கம் கொண்ட நாடு - ஹாலந்து.

 • துப்பாக்கியைத் தேசியக் கொடியின் அடையாளமாக வைத்திருக்கும் நாடு - மொஸாம்பிக்.

 • உலகில் முதன் முதலாகக் கண் வங்கியை ஏற்படுத்திய நாடு - இலங்கை.

 • ஓரினச் சேர்க்கை திருமணத்தை முதன் முதலாக அனுமதித்த நாடு - டென்மார்க்.

 • வருடத்திற்கு ஒரு முறை அதிபரைத் தேர்ந்தெடுக்கும் நாடு - சுவிட்சர்லாந்து.

-தேனி.எஸ்.மாரியப்பன்.

தேனி.எஸ்.மாரியப்பன் அவர்களின் இதர படைப்புகள

     முந்தைய குறுந்தகவல் காண

 

 

முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.