........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குறுந்தகவல்-85

உலகம் சுற்றுவதில் சாதனை

ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌த்தின் துபாயில் வாழ்ந்து வ‌ரும் இந்திய‌ரான‌ க‌ஷி ச‌ம‌த்த‌ர்.  ஐக்கிய‌ நாடுக‌ள் ச‌பையில் உறுப்பின‌ராக‌வுள்ள‌ 194 நாடுக‌ளுக்கு 12 வ‌ருட‌ம் எட்டு மாத‌ம் 13 நாட்க‌ளில் சென்று வ‌ந்துள்ளார். 1995 ஆம் ஆண்டு செப்ட‌ம்ப‌ர் 15 ஆம் தேதி முத‌ல் 2008 ஆம் ஆண்டு மே மாத‌ம் 27 ஆம் தேதி வ‌ரை சென்று வ‌ந்துள்ளார்.

இப்ப‌ய‌ண‌த்திற்கான விசா பெறுவ‌த‌ற்கு ப‌ல்வேறு சிர‌ம‌ங்க‌ளைச் ச‌ந்தித்தாலும் த‌ன‌து ப‌ய‌ண‌த்திட்ட‌த்திலிருந்து பின்வாங்க‌வில்லை. 194 நாடுக‌ளில் 160 நாடுக‌ளைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் நேர‌டியாக‌ அந்த‌ந்த‌ நாட்டு விமான‌ நிலைய‌ங்க‌ளில் விசா பெற‌ இயலாது.
த‌ன‌து ப‌ய‌ண‌த்தின் போது ப‌ல்வேறு நாடுக‌ளின் சுற்றுலாத்துறை அமைச்ச‌ர்க‌ளைச் ச‌ந்தித்து சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளுக்கு விசா வ‌ழ‌ங்கும் முறைக‌ளை எளிதாக்க‌ கேட்டுக் கொண்ட‌தாக‌க் குறிப்பிட்டார். உல‌க‌ சுற்றுலா குறித்த‌ விழிப்புண‌ர்வினை ஏற்ப‌டுத்துவ‌தே த‌ன‌து ப‌ய‌ண‌த்தின் நோக்க‌ம் என‌க் குறிப்பிட்டார் ச‌ம‌த்த‌ர்.

உல‌க‌ம் சுற்றுவ‌தில் சாத‌னை புரிந்துள்ள‌ இவ‌ருக்கு அமெரிக்க‌ன் வெல்ட் ரிகார்ட் அகாட‌மி, இந்தியாவின் லிம்கா புக் ஆஃப் ரிக்கார்ட், கின்ன‌ஸ் உல‌க‌ சாத‌னை நிறுவ‌ன‌ம் உள்ளிட்ட‌ நிறுவ‌ன‌ங்க‌ள் ச‌ம‌த்த‌ரின் ப‌ய‌ண‌ம் உல‌கின் முத‌லாவ‌தும் ம‌ற்றும் வேக‌மான‌தும் என‌ சான்று அளித்துள்ள‌ன‌.

-முதுவை ஹிதாயத்.

முதுவை ஹிதாயத் அவர்களது மற்ற படைப்புகள்

     முந்தைய குறுந்தகவல் காண

 

 

முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.