........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

மனம் திறந்து-10

            ஆயிரம் ஆண்டுகள் வாழுங்கள்...

                                                                                                -அருணகிரி (chessarunagiri@yahoo.com)

 வெற்றியை விரும்புவோர் படிக்க வேண்டிய நூல்கள்...

 • திருக்குறள்

 • உலகின் சிறந்த 100 புத்தகங்கள்

 • உலகை மாற்றிய விஞ்ஞானிகள் - 12 புத்தகங்கள்

 • பஞ்ச தந்திரக் கதைகள்

 • ஈசாப் நீதிக் கதைகள்

 • தெனாலிராமன் கதைகள்

 • சிந்துபாத் கதைகள்

 • ஜென் கதைகள்

 • புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை - 100 பேர்

 • உலகின் சிறந்த 100 சொற்பொழிவுகள்

 • உலக சரித்திரம் - நேரு

 • ஆங்கிலம் - தமிழ்ச் சொற் களஞ்சியம்

 • கணினி கலைச்சொல் களஞ்சியம்

 • இன்டர்நெட்

 • உச்சி முதல் உள்ளங்கால் வரை (3-பாகம்)

 • சிலப்பதிகாரம்

 • தொல்காப்பியம்

 • புறநானூறு , அகநானூறு , சங்க இலக்கியங்கள் , கருணாமிர்த சாகரம் (தமிழ் இசை நூல்)

 •  தமிழ்த் திரைப்பட வரலாறு

 • பகுத்தறிவுக் கருத்துக்கள் அடங்கிய பெரியார் கணினி , பெரியார் களஞ்சியம் , பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள்

 • கம்ப இராமாயணம்

 • மகாபாரதம்

 • தேவாரம், திருவாசகம், திருமந்திரம்

 • பைபிள், குர்-ஆன், பகவத்கீதை

 • அர்த்த சாஸ்திரம்

 • மரியாதை ராமன் கதைகள்

 • விக்கிரமாதித்தன் கதைகள்

 • இராயர்- அப்பாஜி கதைகள்

 • அக்பர்-பீர்பால் கதைகள்

 • முல்லா நஸிருத்தீன் கதைகள்

 • 1001 இரவு அரபுக் கதைகள்

 • பரமார்த்த குருவும் சீடர்களும்

 • Encyclopedia Britannica

 • National Geographic Traveler

 • People who have helped the world - 26 books

 • Organisations that helps the world - 6 books

 • 100 Great 19th Century Lives

 • 100 Great Adventures

 • 100 Great Speeches

 • Webster's New world Dictionary of Quotations

 • Guinness Book of World Records

 • Competition Success Year Book

 • Manorama Year Book

 • Limca Book of Records

 • Glimpses of World History

 • Shakespeare Drama's

 • Gulliver's Travel

 • The Prince

 • Time- Stephen Hawkins

 • Tell me What?

 • Tell me Where?

 • Tell me When?

 • Tell me How?

 • Tell me Who?

 • Tell me About

உலகில் சொல்லப்பட்டு வருகின்ற அனைத்துத் தத்துவங்களும், நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளும் மேற்கண்ட நூல்களில் அடங்கி உள்ளன. எனவே, இந்த நூல்களை நீங்கள் படிப்பதுடன் உங்கள் குழந்தைகளை 17 வயதிற்குள் ஒரு முறை படிக்கச் செய்து விடுங்கள். குறிப்பாக, நாள்தோறும் ஒரு திருக்குறளை உங்கள் குழந்தைகளுக்கு, நீங்கள் படித்துக்காட்டி விளக்கம் சொல்லுங்கள். அவர்களின் வாழ்நாள் முழுமையும், அவர்களுடைய காதுகளில் உங்கள் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும். நன்மை பயக்கும். மேற்கண்ட நூல்கள் அனைத்தையும் விலை கொடுத்து வாங்க இயலாவிடினும், நூல் நிலையங்களில் தேடிப்பிடித்துப் படியுங்கள். பக்தி, சோதிடம் போன்ற பொய்களைப் படிக்காதீர்கள். தொடர்கதைகள், கவிதைகள் போன்ற கற்பனை இலக்கியங்களில் உங்கள் பொன்னான பொழுதை வீணாக்காதீர்கள். ஒவ்வொரு துறையிலும் சிறந்த நூல் எது என்பதை விசாரித்துத் தெரிந்து கொண்டு, அதை மட்டும் படியுங்கள்.

பிறர் எழுதிய நூல்களைப் படிப்பது மட்டும் போதாது. உங்கள் வாழ்க்கைக் குறிப்புகளை, உங்கள் கருத்துக்களை மட்டும் தொகுத்து ஒரு நூலாக நீங்கள் எழுதுங்கள். உங்கள் நூல்களில் , புணர்ச்சி விதி என்ற பெயரில் இரண்டு சொற்களைச் சேர்த்து எழுதாதீர்கள். 21 ஆம் நூற்றாண்டு இளைய தலைமுறையினருக்கு எளிதில் புரிகின்ற வகையில், தமிழ்ச் சொற்களை உருவாக்குங்கள். தமிழ் எழுத்துக்களை நேராக அச்சிடுங்கள். சாய்த்து அச்சிடாதீர்கள். உங்கள் குடும்ப ஆவணங்களை, படங்களுடன் உருவாக்குங்கள். அதன் மூலம் நீங்கள் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வீர்கள். ஏற்கனவே பிறப்பைத் தீர்மானித்துவிட்ட மனிதன் இறப்பையும் வெல்லக்கூடிய காலம் நெருங்கி விட்டது. இனி, உடலாலும் ஆயிரம் ஆண்டுகள் வாழ முடியும். குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவப் பரிசோதனைகள் செய்து கொள்ளுங்கள். நடை, நீச்சல், உடற்பயிற்சி செய்யுங்கள். குருதிக்கொடை வழங்குங்கள். மற்றவர்களை, " நூறு ஆண்டுகள் வாழ்க" என்று வாழ்த்துவதற்குப் பதிலாக, " ஆயிரம் ஆண்டுகள் வாழ்க" என்று வாழ்த்துக.

முந்தைய மனம் திறந்து பார்க்க

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.