........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
மனம் திறந்து-16 மனித வாழ்க்கை சுமையில்லாமல் இருக்க...
-சந்தியா கிரிதர், புது தில்லி.
பிறப்பும் இறப்பும் வாழ்க்கையின் இரு பக்கங்கள். இதனிடையே
எத்தனையோ மாற்றங்கள் தோன்றுகின்றன. பிறந்தோம், வளர்ந்தோம், உழைத்தோம்,
வாழ்ந்தோம், இறந்தோம் என்று இந்த மனித வாழ்க்கை ஒரு சக்கரம் போல சுழலுகிறது. ஒரே
பாதையில் ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கைச் சக்கரம் திடீரென்று மாற்றங்களைச்
சந்திக்க நேரிடும் போது தடுமாறுகிறது. இந்த தடுமாற்றத்தை நீக்கி மனப்
பக்குவத்தோடு மாற்றங்களை ஏற்றுக் கொண்டு திறமையாக வாழ்க்கைச் சக்கரத்தை தடம்
புரளாமல் ஓட்டும் மனிதன், வாழ்க்கையைச் செம்மையாகப் புரிந்து கொண்டு வாழ்கிறான்
என்று சொல்லலாம்.
இந்த இரண்டு காலச் சக்கரங்களுக்கிடையே மனிதன் அகம்பாவம், கோபம்,
கெட்ட அதிர்வலைகள் போன்ற குணங்களுக்கு அடிமையாகிறான். அகம்பாவம் மனிதனின்
சுயரூபத்தை அழித்து அவனை தனிமையாக்குகிறது. “தான்” என்ற எண்ணம் கொண்ட மனிதன்
என்றும் வாழ்ந்ததில்லை என்ற பாடலின் வரிகள் இன்றும் நினைவுக்கு வருகின்றன.
அகம்பாவத்தால் மனிதன் மகிழ்ச்சியைத் தொலைக்கிறான். வாழ்க்கையில் நிகழும்
சம்பவங்களில் இனியதாகவும் இருக்கிறது. கெட்டதாகவும் நடக்கிறது. இரண்டையும்
மனிதன் ஒன்றாக எடுத்துக் கொண்டு வாழ்க்கையை சாதாரணமாக வாழ கற்றுக் கொள்ள
வேண்டும். வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மட்டும் நிகழ்ந்து
கொண்டிருந்தால் வாழ்க்கை அவ்வளவு சுவையாகத் தோன்றாது. அவ்வப்போது பிரச்சனைகளும்
தோன்றினால்தான் வாழ்க்கையில்
அதனை சமாளிக்கும் தன்மையும் மனிதனுக்குள்ளே பிறக்கும்.
ஊக்கமில்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கை இல்லை. வாழ்க்கையின் மீது
மனிதன் நாட்டம் கொண்டு வாழ்க்கையின் ஒவ்வொரு பொழுதையும் மகிழ்ச்சியாகக்
கழிப்பவன் தன்னுடன் சுற்றுச் சூழலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறான்.
மற்றவரின் செயலை மனதார பாராட்டக் கற்றுக் கொள்ள வேண்டும். மற்றவரின்
மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும். இந்தச் சின்ன
மாற்றம் மற்றவர்களின் அன்பையும், பாசத்தையும் அவனுக்குப் பெற்றுக் கொடுக்கிறது. _______________ |
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.