........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
மனம் திறந்து-24 பெண்களுக்கு சமூகத்தில் மதிப்பு கிடைத்து விட்டதா?
-சக்தி சக்திதாசன்,
லண்டன்.
"மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்" . அழகான, கருத்தாழமிக்க ஒரு பாடல். பெண்ணின் மீது கொண்ட காதலினால் ஆண் ஒருவனின் கற்பனைச் சிறகு விரிந்ததினால் உதித்த ஒரு பாடல்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் திகதி. சர்வதேச
மகளிர் தினம். 2009ம் ஆண்டிலே பெண்கள் மீதான
-இது நான் பல இடங்களில் நேரடியாகப் பார்த்த
நிகழ்வு. இதுபோல், இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் நானறிந்த பல நண்பர்கள் தாம் கல்வி பயின்று கொண்டிருந்த போதே மணமுடித்து வந்தவர்கள். தமது படிப்புக்கு வசதியாக தமது மனைவியரை வெளியே வேலைக்கு அனுப்பி விடுவார்கள். அவர்கள் கல்வியைப் படித்து முடித்துப் பட்டம் பெற்றதும், தமது மனைவியின் நிலையைக் கொஞ்சம் உயர்த்தி விடுவதற்காக அவளைக் கல்வி பயில அனுப்புவோமே என்று எண்ணுவோர் மிகவும் சொற்பமே. ஒரு சமுதாயத்தின் உயர்வு அந்தச் சமுதாயத்தில் ஆண்களுக்குச் சரி நிகராகப் பெண்களும் தமது கல்வியறிவை உயர்த்தி, பொது அறிவினில் தம்மை வளர்த்துக் கொள்வதினிலேயே உள்ளது. ஆணுக்குப் பெண் என்றுமே தாழ்வானவர்களல்ல. ஏன் , ஆண்களை விடத் திறமையாகப் பல சமயங்களில் பெண்கள் செயலாற்றுவதைக் காணமுடிகிறது. ஆனால் பெண்களால் கிடைக்கும் வசதிகளை மட்டும் பெற்றுக் கொண்டு அவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக சமுதாயக் கோட்பாடுகள் என்னும் அநீதியான பல விதிகளுக்குள் அவர்களை முடக்கி விடும் பல ஆண்கள் இந்த நவீன காலத்திலும் மலிந்து கிடக்கிறார்கள் என்பதும் வேதனைக்குரிய ஒன்றுதான். பெண்களின் சுதந்திரம் என்பது அரைகுறை ஆடையணிந்து, கட்டுப்பாடின்றித் திரிவதல்ல. அதை அப்படியாகத் திரிபு படுத்தி வைத்திருக்கும் பெண்கள் உண்மையிலேயே பெண்களின் சுதந்திரத்தை விரும்புகிறவர்களும் அல்ல. தன்னுடைய சுயத்தை அறிந்து, அந்தச் சுயத்தின் உதவியுடன் சமுதாயத்தினில் எவ்வித தடையுமின்றி தனது கலாச்சார வரம்புக்குள் இயங்கக் கூடிய வல்லமை அடைவதே பெண்களின் சுதந்திரம் என்று கூறலாம்.
எனது நண்பரொருவரின் அலுவலகத்திலே மேலாளராக ஒரு
பெண் இருக்கிறார். அவருக்குத் தான் ஒரு பெண்ணுக்குக் கீழே பணிபுரிகிறேன் என்று
சொல்லும் போதே, அவரது முகத்தினில் ஒரு சோகம் கலந்த மாற்றத்தைப் பார்க்க முடியும்.
இத்தனைக்கும் அவர் இங்கிலாந்திலே, முன்னேற்றமடைந்த கலாச்சாரம் என்று கூறப்படும்
சமூகத்திலே முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருபவர். இந்தச் சமூகத்தில்
உள்ள பல நாகரீக அடையாளங்களைத் தான் ஏற்றுக் கொண்டு வாழும் அதே வேளை, தனது மனதில்
கவிழ்ந்துள்ள மடமை என்னு இருளை விலக்க முடியாத அளவிற்கு கோழைத்தனத்தைக்
கொண்டிருக்கிறார். அப்படியானால் பெண்கள் தாம் வாழ்க்கையில் எதிர் நோக்கிய இடர்பாடுகளின் செறிவு என்ன? அவர்களின் இந்த முன்னேற்றத்தின் போது அவர்களை நோக்கிய ஆண்களின் பார்வை எத்தகையதாக இருந்தது? இவைகளுக்கெல்லாம் முழுமையான பதில் கிடைக்கும் போதுதான் பெண்களின் சுதந்திரத்தைப் பற்றி நாம் சரியாக கணக்கிட்டுக் கொள்ள முடியும். என்னோடு பணிபுரியும் ஒரு இந்தியப்பெண் (வடஇந்திய நாட்டுப்பெண்) இங்கிலாந்திலேயே பிறந்து வளர்ந்தவர். மிகவும் நாகரீகமாக உடை உடுத்துபவர். அவர் சில காலங்களுக்கு முன்னர் மேலாளாராகப் பதவி உயர்த்தப்ப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரின் நடத்தை பற்றிய பல வதந்திகள் வெளிவரத் தொடங்கின. இதை அவரே ஒரு முறை கண்ணீருடன் என்னுடன் பகிர்ந்து கொண்டார். அனைவருடனும் சிரித்துப் பழகுவதை இவர்கள் இப்படி தவறாகப் பேசுகிறார்களே என்று ஆதங்கப்பட்டார். அவரைப் பற்றிய இந்த வதந்திகளை என்னோடு பணிபுரிந்த மற்ற ஆசிய ஆண்கள் மட்டுமல்ல, வெள்ளை இனத்தவரும் சேர்ந்தே பேசிக் கொண்டார்கள். அது மட்டுமல்ல திறமையற்ற சில பெண்கள் கூடப் பொறாமையால் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர். ஆனால், இத்தனைக்கும் தனது பணியில் அந்தப்பெண் மிகவும் சிறந்து விளங்கினார். இத்தகைய ஒரு சூழலில்தான் சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் வந்து செல்கிறது. என்னுடன் பேசிக் கொண்டிருந்த நண்பர் ஒருவர் பெண்களுக்குத்தான் எத்தனையோ சலுகைகள் உண்டே, இந்த நூற்றாண்டில் இப்படி ஒரு தினம் இன்னும் தேவையா? என்று கேட்டார். அவரின் கேள்வியில் இருந்த கேலியைப் புரிந்து கொண்ட நான், "இப்படியான் கேள்விகள் உங்களைப் போன்றவர்களிடம் இருந்து மறையும் வரை இந்நாள் தேவையே " என்று பதில் சொன்னேன். பெண்கள் சமூகத்தில், சமுதாயத்தில் முன்னேறுவதற்கு ஆண்களின் ஆதரவும், புரிந்துணர்வும் அவசியம். ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு ஒரு பெண்ணின் முழுச்சுதந்திரத்தின் பின்னால் ஒரு ஆண் இருப்பதும் அவசியமாகிறது. அதேசமயம் பெண்கள் தாமே தம்மீது விலங்களைப் பூட்டி விடும் சந்தர்ப்பங்களும் உண்டு. தான் ஒரு பெண்தானே ! தனக்கு இது போதும் என்னும் மனப்பான்மை பெண்களின் மனதிலிருந்து அடியோடு களைந்தெறியப்பட வேண்டும். காலில் சலங்கையைப் பூட்டி இனிமையான சந்தத்தை எழுப்புங்கள். ஆனால் அதையே கால் விலங்குகளாக நினைத்து உங்களைத் தரையோடு பிணைத்து விடாதீர்கள். பெண்களும், ஆண்களும் சரி சமனாக கைகோர்த்து உண்மையான நட்புணர்வுடன் எந்தச் சமூகத்தில் நடை போடுகிறார்களோ, அந்தச் சமூகம் தான் உலகில் உயர்ந்து நிற்கும்.
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.