........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

மனம் திறந்து-33

வாத்சாயனார் சொன்ன ரகசியம்.

                                                                                                  -நெல்லை விவேகநந்தா.

எங்கோ ஓர் பயணத்தில் எதிர்பாராதவிதமாய் அவனை சட்டென்று பார்க்கிறது ஒரு இளம்பெண்ணின் பார்வை. காந்தம் இழுத்த இரும்பாய் சொர்க்கத்தில் மிதக்கிறான் அவன். ஆனந்தம், மகிழ்ச்சி, சந்தோஷம் ஆகியவற்றுக்கு முழுமையான விளக்கத்தை அங்கே அவன் உணர்கிறான்.

எல்லா ஆண்களுக்குமா இது போன்ற காந்த விழிப் பெண்களின் கடைக்கண் பார்வை கிடைக்கிறது? அந்த ஒரு பார்வை கிடைக்காமல் போனவர்கள், "அதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்று தங்களுக்கு தாங்களே சமாதானம் செய்து கொள்கிறார்கள்.

கடலின் ஆழத்தைக் கூட கண்டுவிடலாம். ஆனால், ஒரு பெண்ணின் மன ஆழத்தை காண முடியாது என்று கவிதைகள் தீட்டிய கவிஞர்கள் பலர். காமசூத்ரா படைத்த வாத்சாயனாரும் அதை ஆமோதிக்கிறார் என்றாலும், எந்த வகை பெண்கள் ஆண்களை பார்த்த மாத்திரத்தில் மயங்குகிறார்கள் என்பதையும் ஒரு பட்டியலே இடுகிறார்.

அவர் சொல்வதை பார்ப்போமா?

"உங்களை ஒரு பெண் உற்று உற்றுப் பார்க்கிறாளா? அவளே, வலிய வந்து பழகுகிறாளா? அப்படியென்றால், அவள் நிச்சயம் உங்களிடம் மயங்குவாள். மேலும்,

 • வஞ்சக நோக்கம் கொண்டவள்

 • அடிக்கடி வீட்டு வாசலுக்கு வந்து நிற்பவள்

 • அடுத்தவர்களுக்காக தூது செல்பவள்

 • தெருவில் வருவோர், போவோரை வேடிக்கை பார்ப்பவள்

 • தாலி கட்டிய கணவனிடம் இருந்து விலகி வாழ்பவள்

 • தனது பிறந்த குலத்தைப் பற்றி முழுமையாக அறியாதவள்

 • செக்சில் அதிக ஆர்வம் கொண்டவள்

 • வீட்டைத் தவிர மற்ற வெளியிடங்களில் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பவள்

 • எந்தவித கட்டுப்பாடும் இன்றி சுதந்திரமாக திரிபவள்

 • தகுதி இல்லாதவனை திருமணம் செய்து கொண்டவள்

 • வயதான கணவனை மணந்து கொண்டவள்

 • இளம் வயதில் கணவனை இழந்தவள்

 • ஆண்மைத்தன்மை இல்லாதவனை திருமணம் செய்தவள் 

- இவர்கள், தங்களுக்கு பிடித்த பிற ஆண்களிடம் எளிதில் மயங்கி விடுவார்கள்" என்கிறார் வாத்சாயனார்.

இதே போன்று, பெண்களை எளிதில் மயக்கும் ஆண்கள் எப்படி செயல்படுவார்கள் என்பது பற்றியும் அவர் தனது காமசூத்ராவில் கூறியிருக்கிறார்.

சில ஆண்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பார்கள். நல்ல அறிவு பெற்றிருப்பதோடு நிறைய படிக்கவும் செய்திருப்பார்கள். ஆனால், "ஒரு கேர்ள் ப்ரண்ட் கிடைத்துவிட மாட்டாளா?" என்று ஏங்குவார்கள்.

இன்னும் சில ஆண்களுக்கு படிப்பு என்பதே வேப்பங்காயாக கசக்கும். பொது அறிவுக் கேள்விகளை கேட்டால் தேமே என்று விழிப்பார்கள். ஆனால், ஒன்றுக்கு இரண்டு, மூன்று கேர்ள் ப்ரண்ட்களை மயக்கி வைத்திருப்பார்கள்.

இவர்களுக்கு மட்டும் அது எப்படி சாத்தியமாகிறது? எல்லாம் அவர்களது குணாதிசயம்தான் என்கிறார் வாத்சாயனார்.

பல பெண்களை எளிதில் தன் வலையில் வீழ்த்திவிடும் ஒரு ஆண் எப்படிப்பட்டவனாக இருப்பான்? அதுபற்றி வாத்சாயனார் கூறுவதை பார்ப்போமா?

 • பெண்களை சந்தோஷப்படுத்தும் செயல்களை தாராளமாக செய்வான்.

 • விருந்து போன்ற நிகழ்ச்சிகளில் ஆரவாரமான மகிழ்ச்சியுடன் திளைப்பான்.

 • எந்த விழா என்றாலும் பரிசும், கையுமாக வந்து ஆஜராகிவிடுவான்.

 • பிற ஆண்களுக்காக தூது செல்வான்.

 • சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவனைவிட அழகானவனாகவும், அறிவானவனாகவும் இருப்பான்.

 • அவளது பாய் ப்ரண்டுடன் தொடர்பு கொண்டிருப்பான்.

 • அவளது ரகசியத்தை அறிந்தவனாக இருப்பான்.

 • இளம் வயதில் சம்பந்தப்பட்ட பெண்ணின் தோழனாக இருந்திருப்பான்.

 • செக்ஸ் பற்றி நிறையவே அறிந்திருப்பான்.

 • உல்லாசமாக இருப்பதில் அதிக ஆர்வம் காட்டுவான்.

 • அடிக்கடி பெண்கள் பார்வையில் படும்படி இருப்பான்.

 • முதலாளி என்ற அந்தஸ்திலும் இருப்பான்.

 • தாராள மனப்பான்மை நிறையவே இருக்கும்.

 • மனதை கவரும் கதை சொல்வதில் இவனுக்கு நிகர் இவனே!

 • துணிச்சல் அதிகம் இருக்கும்

- இப்படிப்பட்ட ஆண்கள் எளிதில் பெண்களை மயக்கி விடுவார்கள் என்கிறார் வாத்சாயனார்.

நீங்க எப்படின்னு இப்போது புரிந்திருக்குமே...?

நெல்லை விவேகநந்தா அவர்களின் பிற படைப்புகள்

முந்தைய மனம் திறந்து பார்க்க

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.