........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
மனம் திறந்து-38 அஹிம்சைக்கு வாங்க...!
-
மகாபாரதத்தில் அஹிம்சை, தர்மத்திற்கு சமமாக
கருதப்படுகிறது. அஹிம்சை என்ற கொள்கையைப் பின்பற்றிய மகாத்மா காந்தி
பாரதத்திற்கு சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தார். சமஸ்கிருதத்திலிருந்து பிறந்த
சொல்லான “அஹிம்சை” தனக்குள்ளே ஹிம்சையை அடக்கிக் கொண்டு உருவாகியுள்ளது. கொடூரம்,
வக்ர புத்தி, வஞ்சகம் ஆகிய இயல்புகள் ஹிம்சையில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.
ஆனால் இந்த ஹிம்சையை, தனக்குள்ளே அடக்கம் கொண்டுள்ள அஹிம்சையானது,
தலைதூக்குவதற்கு இடம் கொடுப்பதில்லை. அஹிம்சை, மனிதனை நன்னெறிப் பாதையில் வழி
நடத்திச் செல்லுகிறது. உடுத்தும் ஆடை, உண்ணும் உணவு இவைகளிலிருந்து ஒரு மனிதனுடைய அஹிம்சைத் தன்மையை அறிந்து கொள்ளலாம். ஒரு சாதாரண மனிதனின் அன்றாட வாழ்க்கையிலிருந்து அவனுடைய இயல்பைத் தெரிந்து கொள்ளலாம். எதற்கெடுத்தாலும் சண்டைக்கு நிற்கும் அடாவடிப் போக்கை கொண்ட ஒருவனின் முழு விவரத்தை, அவனுடைய ஊரே, பறைசாற்றி விடுகிறது. அவனிடமிருந்து உதிரும் சொற்களிலிருந்தும், அவன் நிகழ்த்தப் போகும் செயல்களிலிருந்தும், அவன் எந்த கொள்கையைப் பின்பற்றுகிறான் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். மனிதனுடைய சொற்களும், செயல்களும் அவனுடைய எண்ணங்களின் பிரதிபலிப்பாகும். கோபம், வெறுப்பு, பொறாமை ஆகியவைகளைக் கொண்ட மனிதனிடமிருந்து தெளிந்த ஓடையை எதிர்பார்ப்பது விரயமாகும். அப்படிப்பட்ட மனிதனிடமிருந்து சூறாவளி, புயல் ஆகியவைகள் உருவாகின்றன. அழிவைத் தரக்கூடும் இப்படிப்பட்ட தன்மைகள் ஒரு மனிதனை அரக்கனாகக் காட்டுகிறது. அந்தச் சமயத்தில் இயற்கையின் நியதிகளையும் அவன் தகர்த்து எறிகின்றான், சுயநலம் இழந்து அதர்மங்களை செய்கின்றான், பாவத்தைச் சேகரித்துக் கொள்கின்றான். எந்தச் சூழ்நிலையிலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, தூரதிருஷ்டியை பிரயோகித்து செயல்படும் ஒவ்வொரு மனிதனுடைய பாவபுண்ணியக் கணக்கில் தர்மக்கணக்கு அதிகரித்துக் கொண்டு செல்கிறது. இந்த தர்மம்தான் இறுதிவரை மனிதனோடு வாழ்க்கையில் பயணிக்கிறது. தர்மம் தலை காக்கும், தக்க சமயத்தில் கை கொடுக்கும் என்று முன்னோர்கள் சொன்ன பழமொழியை உணர்ந்து அஹிம்சையுடன் செயல்படுவோம்.
சந்தியா கிரிதர் அவர்களின் இதர படைப்புகள்
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.