........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
மனம் திறந்து-57 வா! வா!! வசந்தமே வா!
நான்கு பருவங்களும் அந்தந்த காலகட்டத்தில் வந்து போகின்றன. பனிக்காலம், கோடைக்காலத்துக்குமிடையே உள்ள பருவம் வசந்தகாலமென்று அழைக்கப்படுகிறது. கொண்டாட்டம், குதூகலம் இரண்டும் நிரம்பியது தான் இந்த வசந்த காலம். வசந்தமென்று உச்சரிக்கும் போதே அதற்குரிய அழகிய தோற்றம், சந்தோஷமான தருணங்கள், நறுமணம் நிறைந்த சூழ்நிலை போன்றவைகள் தாமாக உதயமாகிறது, நம்மைத் தேடி வருகிறது.
மரங்களிலிருந்து இலைகள் உதிர்ந்து போக, காய்ந்து உலர்ந்த சருகுகள் தரணியின்
மீது படருகையில், ஒரு காலத்தில் பசுமையோடு மஞ்சள்-சிவப்பு நிறப்பூக்கள்
நிரம்பிய மரங்கள் இலையுதிர் காலத்தில் வெத்தான குச்சிகளோடு தோற்றமளிக்க,
தன்னுடைய திருவிளையாடலைக் காட்டிவிட்டு நகருகையில், சில
கணங்கள் கூட பொறுக்காமல் பனிக்காலம்
பிரபஞ்சத்தை தழுவிக் கொள்கிறது. இலையுதிர் காலம்
வரைந்து சென்ற ஓவியத்தில் அங்காங்கே பனிக்கட்டிகளை தூவிவிட்டு தரணியை வெள்ளைச்
சீலையால் அலங்கரித்து, உறைபனிக்காலம் தரணியின் அழகை மெல்ல
மெல்ல சுவை பார்த்து ரசிக்கிறது. பறவைகளின் சத்தங்கள், இதமான தென்றல், அதனோடு கடற்கரையை நோக்கிச் செல்லும் பாதங்கள், பாதங்களை தொட்டுவிட்டுத் திரும்புகிற அலைகள், மென்மையாக தேகத்தை தடவிக் கொடுக்கிற கதிரவன் கிரணங்களென்று வசந்தம் தனக்குரிய பாணியோடு அடியெடுத்து வைக்க, தரணி முழுவதும் விவரிக்க முடியாத ஒரு வகை புத்துணர்ச்சி படருகையில், உயிரினங்களுக்கு புதியதொரு தெம்பும் தைரியமும் கிடைக்கிறது. சாயங்காலப் பொழுது சாய்கையில் வெளிச்சமும் இருட்டும் கலந்து பூமியை அணைத்துக் கொள்ள, பறவைகள் சப்தமிட்டபடியே கூட்டுக்குள் திரும்புகையில், சலசலத்துக் கொண்டிருந்த இயற்கை உறக்கத்துக்கு தயார்படுத்திக் கொள்ளவும், விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் வீட்டுக்குள் நுழையவும், அந்தி வேளை காற்றை வாங்கிய வண்ணம் வீடுதிரும்பும் தம்பதியர்களின் முகத்தில் வசந்தமான புன்முறுவலென்று வசந்த காலத்துக்குரிய பாணியை எவரேனும் மறக்க முடியுமா? வசந்த காலத்தினுடைய கொண்டாட்டமும், பரவசமும் வடித்து வைத்த சிற்பங்கள் சந்தோஷத்தில் தன்னையே மறந்து நடனமாடுவதைப் போலதொரு உணர்வைக் கொடுக்கிறது. இன்னும் சில கணங்கள், பொழுதுகள், மாதங்களென்று... இந்த பிரபஞ்சம் இதே நிலையில் இருக்கக் கூடாதா என்று மனம் ஏங்குவதை நாம் உணர்ந்திருக்கலாம். ஆனால் பருவம் அந்தந்த காலகட்டத்தில் மாற்றம் கண்டு கொள்கிறது.
வெதுவெதுப்பான
கடந்தகால
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.