........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

மனம் திறந்து-8

            சிங்கப்பூர் பட்டிமன்ற ரஜித்தைப் பாராட்டும் சிங்கப்பூர்காரர் 

                                                                                              - நீ "தீ"

தமிழின் சிறப்பினை இத்தரணி முழுவதும் பலர் பல்வேறு விதங்களில் பரப்பிவருகின்றனர். சிங்கப்பூரில் பட்டிமன்றம் வாயிலாக தமிழ் பணியாற்றி வருகிறார் சிங்கப்பூர் பட்டிமன்றத் தந்தை என்று வர்ணிக்கப்படும் கவிஞர் திரு. ரஜித் அவர்கள்.

திரு ரஜித் அவர்கள் தலைமையில் ஹென்டர்சன் சமுக மன்றம் சிங்கப்பூரின் பரபரப்பான சூழலில் உமறுப்புலவர் மையத்தில் மாதம் ஒருமுறை இறுதி ஞாயிறு அன்று மனம் விட்டு மகிழும் களமாக அமைத்துத் தந்துள்ளது. இது வரை 18 பட்டிமன்றங்களை (18 மாதமாக) வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளார். எந்த ஒரு அமைப்புகளையும் ஆரம்பிப்பது மிகச் சுலபம். ஆனால் வெற்றிகரமாக ஆரோக்கியமாக நடத்துவது என்பது...?

கவிஞர் திரு ரஜித் அவர்கள் தலைமையிலான பட்டி மன்றத்தின் இந்த ( வளர்ச்சி ) வெற்றிக்கு சில காரணங்கள் எனக்கு பிரதானமாகப் பட்டது.

1. திரு ரஜித் அவர்கள் பட்டிமன்றத்திற்காக ஆர்வமாக ஆற்றும்  பணிகள் சில நேரங்களில் அவரை குழந்தையாக மாற்றி விடுகிறது என்றே சொல்ல வேண்டும்.

2. திரு ரஜித் அவர்களோ அவரின் குடும்ப உறுப்பினர்களோ பட்டி மன்ற நிகழ்வுகளில் அதிகம் பங்கு கொள்ளாதது.

3. திரு ரஜித் அவர்களின் துணைவியார்! கலையை ரசிப்பதில் தன் கணவருக்கு கொஞ்சமும் சளைத்தவர் அல்ல .

4. சிரமம் பாராது தன் பட்டிமன்றப் பேச்சின் நடுவிலும் பட்டிமன்ற நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்யும் ஒளிப்பதிவாளர் பட்டிமன்றப் பேச்சாளர் திரு எம்.ஜே.பிராசாத்.

5. ஒவ்வொரு பட்டிமன்ற நிகழ்வுகளிலும் தவறாது கலந்து கொள்ளும் கவிஞர் பிச்சினிகாட்டு இளங்கோ அவர்கள் கண்டெடுத்த கவிமாலை அமைப்பின் கவிதைப் ப்ரியர்கள்.

6. தமிழ் மேல் பற்று கொண்ட நன்கொடையாளர்கள்!

இந்த பட்டிமன்றங்களின் சிறப்பம்சம்

புதியவர்களுக்கு வாய்ப்பு (மேடை) கிடைக்காத (போட்டிச் ) சூழலில் மாதம் ஒரு புதிய பேச்சாளர்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

பட்டிமன்ற முடிவில் பட்டிமன்றத்தின் தலைப்பு பற்றி பார்வையாளர்களின் கருத்தைக் கேட்கின்றனர்

பார்வையாளர்களும் இங்கே பின் பேச்சாளர்களாக உருவெடுத்தனர்

இதைப் பார்க்கும் போது எல்லாம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று பின் நவீனத்துவ பார்வையில் சொன்ன சிறுகதை நாவல் ஆசிரியர் திரு. எம்.ஜி.சுரேஷ் (தமிழ்நாடு) தான் என் ஞாபகத்திற்கு வருகிறார்.

பட்டிமன்றம் பொழுது போக்கிற்காக மட்டும் அமைந்து விடாமல் நம்மைச் சிந்திக்கவும் வைக்கும் தலைப்புகளாகவே இதுவரை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

இப்பட்டி மன்றத்திற்கு பல்வேறு நபர்களின் ஒத்துழைப்பு இருந்தாலும் எனக்குத் தனித்து தெரிவது கவிஞர் திரு ரஜித் அவர்கள் மட்டும் தான். அதனால் தான் அவரை சிங்கப்பூர் பட்டிமன்றத் தந்தை என்று அழைக்கின்றனர்.

இவரை மனம் திறந்து பாராட்ட வேண்டும் என்று தோன்றியது. பாராட்டி விட்டேன்.

முந்தைய மனம் திறந்து பார்க்க

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.