........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

பொன்மொழிகள்

முட்டாளைப் போற்றும் பெரிய முட்டாள்

  • ஒரு துளி ஜலத்தை எடுத்து நன்றாகக் காய்ந்த இரும்பின் மேல் விட்டால் அத்துளி இருந்த இடமே தெரியாமல் போய்விடுகிறது. அதே துளியைத் தாமரை இலையில் விட்டால் முத்து போல் காணப்படுகிறது. மறுபடியும் அதே ஜலமானது சமுத்திரத்தின் மத்தியிலிலுள்ள சிப்பியில் இட்டால் அது உண்மையாகவே முத்தாகி விடுகிறது. அதுபோல அதமனுக்கும், மத்தியமனுக்கும், உத்தமனுக்கும் அவரவர்கட்கு ஏற்றவாறு பலன் கிடைக்கும். இங்கு இரும்பு அதமனுக்கும், தாமரை இலை மத்தியமனுக்கும், சிப்பி உத்தமனுக்கும் உவமையாகக் கூறப்பட்டுள்ளது.      

– நீதி சாஸ்திரம்.

  • இதுதான் நம் வாழ்வின் கடைசிதினம் என்ற உணர்ச்சியுடன் ஒவ்வொரு நாளையும் நாம் மிக்க பயனுடையதாய்ச் செலவிட வேண்டும்.

– சைரஸ் மாக்ஸிம்.

  • அளவுக்கு மீறி பணம் சேர்க்க வேண்டும் என்ற வெறியில் உங்களை நீங்கள் வாட்டிக் கொள்ளாதீர்கள். உண்மையான உழைப்பின் துணை கொண்டு, நியாயமாகக் கிடைப்பதை நன்கு அனுபவிக்கும் மனோபாவத்தை வளர்த்துக் கொண்டவனுடைய வாழ்க்கை சுவையுடையதாய் இருக்கும்.

– ஆதி சங்கராச்சாரியார்.

  • உனது நோக்கத்தை வாளால் சாதித்துக் கொள்வதை விட சிரிப்பு முகத்தால் சாதித்துக் கொள்வதே மிகச் சிறந்தது.

– ஷேக்ஸ்பியர்.

  • மனித வாழ்க்கை என்பது குறுகிய காலமே இருக்கக் கூடியது. அக்காலத்தில் தர்மத்தைப் போற்றி வாழ மனிதன் கற்றுக் கொள்ள வேண்டும். செல்வத்தைச் சேகரிப்பதிலோ இன்பத்தை நாடி அலைவதிலோ பொழுதை வீணாக்கிவிடக் கூடாது. இவை எல்லாம் நிரந்தரமானவை அல்ல. நொடிப் பொழுதில் மாறிவிடக் கூடியவை.  

– ஸ்ரீ ரஹோத்தமச்சார்.

  • வாழ்க்கை என்பது நடைபயிலும் நிழல். அதைச் சந்தித்து, அறிந்து வாழ்ந்து, அதனுடன் ஒன்றுவது என்பது எண்ணற்ற மனிதர்களின் துயரக்கதை.  

– கவிஞர் கோல்ட்ரிஜ்.

  • எப்போதும் ஒரு முட்டாளைப் போற்றிட அவனை விடப் பெரிய முட்டாள் ஒருவன் கிடைத்து விடுகிறான்.  

– பாயிலெவ்.

தொகுப்பு: தாமரைச்செல்வி.

முந்தைய பொன்மொழிகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.