........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

பொன்மொழிகள்

கவியரசர் கண்ணதாசன் சொன்னவை.

நல்லிதயத்தைத் தா.

என் இறைவனே, என் நிலையையும், நினைப்பையும் சமப்படுத்திக் கொண்டே இரு. நினைப்புக்கு மேல் நிலையை உயர்த்துவதானால் அது உன் இஷ்டம். ஆனால் நிலைமைக்கு மேல் நினைப்பை உயர்த்திவிடாதே.

மழை, புயல், இடி, மின்னல்களைத் தாங்கக் கூடிய உடலை எனக்குத் தா!

குளிர்ந்த நீரோட்டம் போன்ற ,தெளிந்த மலர்களுடைய மனதை எனக்குத் தா!

உலகம் என்னை அறிந்து கொள்ளும் அளவுக்குக் கீழாகவே, என்னை நான் அறிந்து கொள்ள அருள்புரி!

செயல் செய்யும் திறமையை என் வாழ்நாளிலும், பெயர் பெறும் பெருமையை என் சாவுக்குப் பிறகும், நிலைத்திருக்கும் பெயரை நிரந்தரமாகவும் எனக்கு வழங்கு!

என் கரங்களில் விளையாடும் காசு, பணங்கள் என்னைக் கல் நெஞ்சனாக்கி விடாமல் என்னைக் காப்பாற்று!

பணத்தை இழப்பதா, குணத்தை இழப்பதா எனும் பிரச்னை வருமாயின் பணத்தையே இழந்து விடவும், இழந்தபின் அதைப்பற்றிச் சிந்திக்காமலிருக்கவும் எனக்கோர் இதயம் வழங்கு!

உள்ளம் உறுதியாக...      

ஆசை, பரபரப்பு, ஆத்திரம், கோபம், துக்கம் போன்ற அத்தனை அலைகளும் இச்சின்னஞ்சிறிய உள்ளத்திலிருந்தே எழுகின்றன.

கண்கள் போக முடியாத தூரத்திற்கும் நினைவுகள் ஓடுகின்றன.

நடக்கக் கூடியதை மறந்து விடும் உள்ளம்;

நடக்க முடியாத ஒன்றுக்காக ஏங்கித் தவிக்கும் உள்ளம்;

உறவுக்காகவே அழுகின்ற உள்ளம்;

பிரிவினிலே கலங்குகின்ற உள்ளம்;

வெற்றியிலே மகிழ்கின்ற உள்ளம்;

தோல்வியிலே துவளுகின்ற உள்ளம்;

ஒவ்வொரு தடவையும் உடைந்து உடைந்து மீண்டும் ஒட்டப்படும் இந்த உள்ளம் உறுதியாக இருந்தால் ஞானம் கைகூடும்

தொகுப்பு: தாமரைச்செல்வி.

முந்தைய பொன்மொழிகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.