........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

உலகப்  பழமொழிகள்

முட்டாள்கள் பணத்தைச் சம்பாதிக்கலாம், ஆனால்...?

  • எலும்புத் துண்டுக்காக ஒரு நேர்மையான மனிதன் தன்னை ஒரு நாயாக ஆக்கிக் கொள்ள மாட்டான்.

 -டென்மார்க்.

  • அயோக்கியனைக் கேட்காதே, அவன் தன் கருத்தையேச் சொல்லிக் கொண்டிருப்பான்.

-ஜப்பான்.

  • உன்னை அளவின்றிப் புகழ்கிறவன் ஏற்கனவே உன்னை ஏமாற்றி விட்டான் அல்லது ஏமாற்ற விரும்புகிறான்.

-ஹங்கேரி.

  • நல்ல நண்பன் ஒருவனைத் தூக்கி எறிந்து விடும் அளவிற்கு உலகில் எவனும் பணக்காரனில்லை.

- துருக்கி.

  • முன் யோசனையுள்ளவன் வெளியே வருவதற்கும் வழியைத் தெரிந்து கொண்டுதான் உள்ளே நுழைவான்.

-அரேபியா.

  • எப்படிப்பட்ட முட்டாளும் பணத்தைச் சம்பாதித்து விடலாம். ஆனால், அதை ஒரு புத்திசாலியால் தான் காப்பாற்ற முடியும்.

-அமெரிக்கா.

  • எவனொருவன் புகழை வெறுக்கிறானோ அவனுக்கு உண்மையான புகழ் தானாக வந்தடையும்.

- அல்போனியா.

  • முட்டாளுடன் புலால் உண்பதை விட அறிவாளியுடன் கல் சுமப்பது மேல்

 -அர்மீனியா.

  • பணிவோடு பேசுபவனைப் பயந்தாங் கொள்ளி என்று நினைப்பவன் படு முட்டாள்.

-திபெத்.

  •  நியாயத்தைக் கடைப்பிடிப்பவன், பொறாமையின் மத்தியிலும் மேலாக விளங்குவான்.

-போலந்து.

தொகுப்பு: தாமரைச்செல்வி.

முந்தைய பொன்மொழிகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.