........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
பொன்மொழிகள். உலகில் மிகவும் கேவலமான செயல்
-காந்திஜி.
நல்லவற்றைக் கூட்டிக்கொள்; தீயவற்றைக் கழித்துக் கொள்; அன்பைப் பெருக்கிக் கொள்;
வாழ்க்கையை நன்கு வகுத்துக் கொள்.
-
எமர்சன்.
சோதனைக் காலங்களில் பொறுமையாக இருப்பவர்களும்,
பிழைகளை மன்னிப்பவர்களும் நேர்மையானவர்கள்.
-நபிகள் நாயகம்.
நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு
நம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம்.
-அன்னை தெரசா.
என்ன
சொல்கிறாய் என்பது முக்கியமல்ல, என்ன செய்கிறாய் என்பதுதான் முக்கியம்.
-ஜவஹர்லால் நேரு.
பிறர் உழைப்பைத் தன் சுயநலத்திற்காகப்
பயன்படுத்துவதே உலகில் மிகவும் கேவலமான செயலாகும்..
-காமராஜர்.
உன் உழைப்பையும் அறிவையும் பொறுத்துத்தான் உன்
வாழ்க்கைத் தரம் இருக்கும்.
- குன்றக்குடி அடிகளார்.
எவரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்;
எதிர்பார்த்தால் இறுதிவரை எதையும் சாதிக்காமலே போய் விடுவீர்கள்.
-எட்மண்ட்
பர்ஸி.
தங்கள் கால்களால் பறவை சிக்கிக்
கொள்ளும்; தன் நாவினால் மனிதன் சிக்கிக் கொள்வான்.
-தாமஸ் புல்லர்.
ஆர்வம்தான் எல்லா முன்னேற்றங்களின் ஆதாரம். அது
இருந்தால் சாதனை; இல்லாவிட்டால் சாக்குப்போக்கு...
-ஹென்றி போர்டு.
அறிவுத் தேவையை விட , கவனக்குறைவுதான் நமக்கு
அதிக துன்பங்களை உண்டாக்குகிறது.
-ப்ராங்க்ளின்
உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள்
இருக்கும்; உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை இருக்கும்.
- சாக்ரடீஸ் |
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.