........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

உலகப் பழமொழிகள்.

உயரமான மரத்தின் அடியிலும் கோடாரி...?

  •   புத்திசாலி ஒவ்வொரு நாளையும் நல்ல நாளாக ஆக்கிக் கொள்வான்.

 - அயர்லாந்து.  

  •  இரண்டு முயல்களை விரட்டினால், ஒரு முயலைக் கூடப் பிடிக்க முடியாது.

 - கொரியா.

  •  மலிவான பொருள்கள் நல்லவையல்ல, நல்ல பொருள்கள் மலிவானவையல்ல.

 - சீனா.

  •  மிகவும் உயரமான மரத்திற்குக் கூட, அடியில் கோடாரி காத்துக் கொண்டிருக்கிறது.

 -துருக்கி.

  •  முறிந்த கையைக் கொண்டு உழைக்க முடியும். ஆனால், உடைந்த உள்ளத்தைக் கொண்டு உழைக்க முடியாது.

-பாரசீகம். 

  •  நம்பிக்கை ஏழைகளை உயிரோடிருக்கச் செய்கிறது, பயம் பணக்காரர்களைக் கொல்கிறது.

-பின்லாந்து.

  • முட்டாள் தனத்தை மூலதனமாகக் கொண்டு செயல்படும் எந்தக் காரியமும் வெற்றியை பெற்றுத் தராது.  

-பெல்ஜியம்.

  •  நீர் அமைதியாக இருப்பதினால், முதலைகள் இல்லை என்று எண்ணி விடாதே...

 -மலேசியா.

  • கெட்டிக்காரன் தவறு வெளியில் தெரியாது, ஆனால் முட்டாளின் தவறு வெளியில் தம்பட்டம் அடிக்கும். 

-அமெரிக்கா.

  •  கொஞ்சம் நட்பை இழப்பதை விட கொஞ்சம் பணத்தை இழப்பது மேலானது.

-மடகாஸ்கர்.

  • உன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமில்லை,  நீ எப்படி இருக்கிறாய் என்பதே முக்கியம்.

- லத்தீன்.

  •  உன்னுடைய கவலைகளை,  உன் முழங்காலுக்கு மேலே போக விடாதே.

- ஸ்வீடன்.

  •  நேற்று செய்த தவறை ஒப்புக் கொண்டால், இன்று நீ அறிவாளி என்பதை உண்ர்த்தும். 

-ஹாலந்து.

  •  தூக்கி எறியும் குதிரையை விட சுமந்து செல்லும் கழுதை மேலானது 

-அயர்லாந்து.

  •  பெரிய கடலிலிருந்து உப்பு நீரைப் பருகுவதை விட,  சிறிய ஓடையிலிருந்து நல்ல நீர் பருகுவது நல்லது.

 -அமெரிக்கா.

  •  ஆயிரம் எதிரிகளை விட , ஒரு போலி நண்பனால்தான் அதிகத் தீமை. 

-அர்மீனியா.

  •  உலகில் அதிசயமான காரியம், முட்டாள் வெற்றியடைவதும் அறிஞன் தோல்வியடைவதும் தான்.

-மடகாஸ்கர்.

  • துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு. ஆனால் அது உனக்கு கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

 -அல்பேனியா.

  •  கோபக்காரனிடம் கொஞ்சம் விலகி இரு. மௌனமாக இருப்பவனிடம் என்றுமே விலகி இரு.

-இங்கிலாந்து.

  •  தவறிழைத்தவன் மறந்து விடுகிறான்.ஆனால் தவறிழைக்கப் பட்டவன் மறப்பதில்லை.

 -ஆப்பிரிக்கா.

தொகுப்பு: தாமரைச்செல்வி.

முந்தைய பொன்மொழிகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.