........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

பொன்மொழிகள்.

எளிதில் ஏமாந்து விடுபவன்.

  • சிலரைப் பற்றி அறியாததால் நாம் அவர்களை வெறுக்கிறோம்; வெறுப்பதாலேயே அவர்களைப் பற்றிய அறியாமையில் உள்ளோம்.

-கார்ல்டன்.

  • எதற்கும் அஞ்சாதே; எதையும் வெறுக்காதே; யாரையும் ஒதுக்காதே; உன் பணியை ஊக்கமுடன் செய்.

-அரவிந்தர்.

  • பிறரைவிடத் தான் புத்திசாலி என்று ஜம்பம் பேசுபவன் எளிதில் பிறரிடம் ஏமாந்து விடுவான்.

-ஈசாப்.

  • குணத்தில் மிக உயர்ந்தவனும், குணத்தில் அடிமட்டத்தில் இருப்பவனும் ஒருபோதும் மாறவே மாட்டார்கள்.

-தாமஸ் புல்லர்.

  • மனதில் நினைப்பதையே சொல்ல வேண்டும் இல்லையெனில், மௌனமாக இருப்பதே சிறந்தது.

-புத்தர்.

  • பரிதாபப்படும் நிலையில் இருப்பதைவிட, மற்றவர்கள் பொறாமைப்படும்படியான நிலையில் இருப்பது நல்லது.

-ஹெரோடோடஸ்.

  • பிறரிடம் குறை கண்டுபிடிப்பது வெகு சுலபம், ஆனால் தன் குற்றத்தைத் தானே அறிவதுதான் வெகு சிரமம்.

 -புத்தர்.

  • சரியானது எதுவென்று உணர்ந்த பிறகும், அதைச் செய்யாமலிருப்பதுதான் கோழைத்தனம்.

-கன்பூஷியஸ்.

  • மற்ற எல்லா விபத்துக்களையும் விட அதிகமாகத் தொல்லை தருவது பய உணர்ச்சி ஒன்றுதான்.

 -மாண்டெயின்.

  • வாழ்க்கையின் முற்பகுதியில் வெற்றி பெறச் சுறுசுறுப்பும் ஊக்கமும் நம்பிக்கையும் தேவை; பிற்பகுதியில் வெற்றி பெறப் பொறுமையும் தன்னடக்கமும் அவசியம் தேவை.

-அரிஸ்டாட்டில்.

தொகுப்பு: தாமரைச்செல்வி.

முந்தைய பொன்மொழிகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.