........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

பொன்மொழிகள்.

அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை வைப்பவர்கள்?

  • வாழ்க்கையில் முன்னேற சொந்தக் காலால் நட. மற்றவர் முதுகில் போக விரும்பாதே.

-சிம்மன்ஸ்.

  • கஷ்டப்பட்டு உழையுங்கள், நீங்கள் உழைக்கும் எந்த உழைப்பும் வீணாவதில்லை.

-டால்ஸ்டாய்.

  • மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத சுமையாகி விடும்.

-பெர்னாட்ஷா.

  • முட்டாளோடு கொள்ளும் நட்பு குடிகாரனோடு விவாதிப்பதைப் போன்ற அறிவற்ற செயலாகும்.

-கலீல் கிப்ரான்.

  • ஒழுங்கு தவறிய இடத்தில் பயன் இருந்தும் மதிப்பு கிடையாது.

-பெஞ்சமின் பிராங்க்லின்.

  • கஷ்டத்தை அனுபவிக்காமல் மனிதன் ஒருபோதும் தன் லட்சியத்தை அடைய முடியாது.

-காமராஜர்.

  • திட்டங்கள் தீட்டிக் கொண்டேயிருப்பதை விட்டொழித்து முதலில் செயலில் இறங்குங்கள்.

 -பிளாரன்ஸ்.

  • நல்ல யோசனை தோன்றும் போது அதை உடனே செய்து முடியுங்கள், வெற்றி உங்கள் பக்கம்.

- ஸ்டோன்.

  • பலவான்கள் உழைப்பில் நம்பிக்கை வைக்கிறார்கள், பலவீனர்கள் அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை வைக்கிறார்கள்.

- எமர்சன்.

தொகுப்பு: தாமரைச்செல்வி.

முந்தைய பொன்மொழிகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.