........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

பொன்மொழிகள்.

போதிப்பதை விட சாதிக்கப் பாருங்கள்!

  • துன்பம் பொறுமையை உண்டாக்குகிறது. பொறுமை அனுபவத்தை உண்டாக்குகிறது. அனுபவம் நம்பிக்கையைக் கொடுக்கிறது.

-மிசீசெல்.

  • அதைச் சொன்னவர் யார்? இதைச் சொன்னவர் யார்? என்று தேடாதீர்கள். சொல்லியது என்ன என்று மட்டும் ஆராயுங்கள்.

-ஆகீகம்பீஸ்.

  • வலிமையும் உணர்ச்சியும் சாதிப்பதை விட பொறுமையும், காலமும் அதிகமாய்ச் சாதித்து விடும்.

-லாபாண்டெயின்.

  • முயற்சி என்பது இதயத்துள் உண்டாகும் ஓர் உணர்ச்சி மட்டுமன்று, ஆற்றலைக் கிளப்பும் ஒரு தூண்டுகோல் அது.

-தாகூர்.

  •  தற்பெருமை எங்கு முடிகிறதோ, அங்கு கண்ணியம் தொடங்குகிறது.

-பங்.

  • அனுபவம் ஒரு கடுமையான ஆசிரியர். முதலில் சோதனையைத் தந்து பிறகுதான் பாடத்தைப் புகட்டுகிறது.

-வெர்னான்லா.

  • முதலில் வேலைக்காரனாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். முதலாளி ஆகும் தகுதி தானாகவே வரும்.

 -விவேகானந்தர்.

  •  போதித்துக் கொண்டிருக்காதீர்கள். சாதித்துக் கொண்டிருங்கள்

- யாரோ.

  •  வேலை மனிதனைக் கொல்வது இல்லை. கவலைதான் கொல்லும்.

- பீசீசர்.

 தொகுப்பு: தாமரைச்செல்வி.

முந்தைய பொன்மொழிகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.