........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
பொன்மொழிகள். யானையிடம் போரிட்டுத் தோற்பது நல்லது.
மிகவும்...
மிகவும் கசப்பானது தனிமையே!
மிகவும் மரியாதைக்குரியவர் அன்னையே!
மிகவும் துயரமானது மரணமே!
மிகவும் அழகானது அன்புணர்வே!
மிகவும் கொடுமையானது பழி வாங்குதலே!
மிகவும் கவலை தருவது செய்நன்றி மறப்பதே!
மிகவும் மகிழ்ச்சியானது சிறந்த நட்பே!
மிகவும் வெறுமையானது இல்லையென்பதே!
மிகவும் ரம்மியமானது நம்பிக்கையே!
-டாக்டர் விஸ்பிரட் பங்க்
எது நல்லது?
தன் அருமையை உணராதவர் பொருளை இரந்து
பெறுவதிலும் பிச்சை எடுப்பது நல்லது.
அன்புடன் உபசரியாதவர் வீட்டில் விருந்துண்பதை விட பட்டினியாயிருப்பது நல்லது.
எளிய ஒரு முயலைக் கொல்வதை விட யானையோடு போரிட்டுத் தோற்பது நல்லது.
இனிய பண்புகளற்ற பெண்களிடம் கூடுவதை விட துறவு கொள்வது நல்லது.
பகைவரோடு நட்பாயிருப்பதை விட பாம்பிடம் பழகுவது நல்லது.
அருளாளர்க்கு ஆதரவு செய்யாத நிலையில் இறப்பது நல்லது.
வஞ்சகர்களுடன் சேர்ந்து வாழ்வதை விட தனித்து வாழ்வது நல்லது.
-குமரேச சதகம்.
தேவையான மூன்றுகள்
இருக்க வேண்டிய மூன்று - தூய்மை, நீதி, நேர்மை.
ஆள வேண்டிய மூன்று - கோபம், நாக்கு, நடத்தை.
பெற வேண்டிய மூன்று - தைரியம், அன்பு, மென்மை.
கொடுக்க வேண்டிய மூன்று - இரப்போர்க்கு ஈதல், துன்புறுவோர்க்கு ஆறுதல்,
தகுதியானவர்க்குப் பாராட்டு.
அடைய வேண்டிய மூன்று - ஆன்ம சுத்தம், முனைவு, உள்ள மகிழ்வு.
தவிர்க்க வேண்டிய மூன்று - இன்னா செய்தல், முரட்டுத்தனம், நன்றியில்லாமை.
பரிந்துரைக்க வேண்டிய மூன்று - சிக்கனம், தொழிலூக்கம், நாணயம்.
நேசிக்க வேண்டிய மூன்று - அறிவு, கற்பு, மாசின்மை.
-மகாவீரர்
மரிக்கும் முன்னால்...
பேசும் முன்னால் நீ கவனமாய்க் கேள்.
எழுதும் முன்னால் நீ யோசிக்கத் தவறாதே.
செலவழிக்கும் முன்னால் நீ சம்பாதிக்கப் பார்.
பிறரை விமர்சிக்கும் முன்னால் உன்னை எண்ணிப்
பார்.
பிரார்த்தனைக்கு முன்னால் மாற்றாரை மன்னித்து
விடு.
ஓய்வு பெறும் முன்னால் சேமித்து வை.
மரிக்கும் முன்னால் கொடுத்து விடு.
-ராபர்ட் கால்டுவெல |
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.