........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

பொன்மொழிகள்.

ஆசையுடையவனுக்கு அறிவு இருக்குமா?

நேரம் எடுத்துக் கொள்.

 • உழைக்க நேரத்தை எடுத்துக் கொள்; அது வெற்றியின் விலை

 • சிந்திக்க  நேரத்தை எடுத்துக் கொள்; அது சக்தியின் ஊற்று

 • வேண்டிய நேரத்தை எடுத்துக் கொள்; அது ஆன்மீக எழுச்சியின் வித்து.

 • விளையாட நேரத்தை எடுத்துக் கொள்; அது இளமையின் ரகசியம்

 • படிக்க நேரத்தை எடுத்துக் கொள்; அது அறிவின் வாயில்.

 • நல்லவை புரிய நேரத்தை எடுத்துக் கொள்; அது இன்பத்தின் பாதை.

 • கனவு காண நேரத்தை நேரத்தை எடுத்துக் கொள்; அது நிலவுக்கு ஏகும் வழி.

 • அன்பு காட்ட நேரத்தை எடுத்துக் கொள்; அது இறைவனின் கொடை

 • சேவை புரிய  நேரத்தை எடுத்துக் கொள்; அது வாழ்வின் குறிக்கோள்.

 • சிரித்து மகிழ நேரத்தை எடுத்துக் கொள்; அது இதயத்தின் இன்னிசை.

-எம்ப்ளாய்மெண்ட் நியூஸில் வந்த தகவல்.

பரிசு

 • உனது பகைவனுக்கு அளிக்கத் தகுந்த முதன்மையான பரிசு மன்னிப்பு.

 • உனக்குப் போட்டியுள்ளவனுக்குச் சகிப்புத் தன்மை.

 • உன் நண்பனுக்கு உன் இதயம்.

 • உன் குழந்தைக்கு நல்ல மாதிரியான நடத்தை.

 • உன் தந்தைக்குத் தகுந்த மரியாதை

 • உனது தாய்க்கு அவள் உன்னைப் பற்றிப் பெருமை படத்தக்க ஒழுக்கம்.

 • உனக்குத் தன்மானப் பெருமை.

 • எல்லா மனிதர்களுக்கும் தாராள மனப்பான்மை

-பால்போர்.

எது கற்பிக்கிறது?

 • அறிவாளர்களுக்குப் பகுத்தறிவு கற்பிக்கின்றது.

 • குறைந்த அறிவுள்ளவர்களுக்கு அனுபவம் கற்பிக்கின்றது.

 • மிருகங்களுக்கு இயற்கை கற்பிக்கின்றது

-ஸிஸரோ.

ஆசையின் விளைவு

 • ஆசையினால் நிறைந்த ஞானம் கூட அழிந்து விடும்.

 • ஆசையுடையவன் முட்டாளாகிறான்.

 • ஆசையுடையவனுக்கு அறிவு தெளிவிருக்காது.

 • ஆசையினால் ஏற்படுவதே வாழ்வு. ஆனால் அந்த ஆசை வெறியாயிருக்கக் கூடாது.

 • ஆசையினால் ஒருவன் மிருகமாகிறான்.

 • ஆசையை நீக்கி வாழும் வாழ்க்கை அவன் விரும்பிய வண்ணம் வாய்க்கப் பெறுவான்.

-புத்தர்

 தொகுப்பு: தாமரைச்செல்வி.

முந்தைய பொன்மொழிகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.