........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

பொன்மொழிகள்

தற்காலிக நன்மைகளை நாடலாமா?

  • ஒவ்வொருவருக்கும் தேடுதல் அவசியம் தேவை. கதவைத் திறந்து பார்க்காமல், மூடிய கதவையே பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி வாழ முடியும்?.      

-ராபர்ட் டி.பாவர்ட்.

  • தீய நண்பனுடன் இருப்பதை விட தனிமையாய் இருப்பதே மேல் என்று நீங்கள் நினைக்கலாம். அதே போல் தனிமையாய் இருப்பதை விட, நல்ல நண்பனுடன் இருப்பதே மேல்.

-முகம்மது நபிகள்.

  • புத்தகத்தில் உலகத்தைப் படிப்பது அறிவை வளர்க்கும். உலகத்தையே புத்தகமாகப் படிப்பது அனுபவத்தை வளர்க்கும்.

-கலைஞர். மு.கருணாநிதி.

  • ஒழுக்கத்தில் சிந்தனையில்லாத இளைஞன் தன் வாழ்க்கையில் உண்மை எது, போலி எது என்று கொண்டு கொள்ளாமல் எல்லாக் காரியங்களிலும் ஏமாற்றம் அடைவான்.

-டால்ஸ்டாய்.

  • நற்பெயரைச் சம்பாதிப்பதற்கு இருபது ஆண்டுகள் தேவைப்படும். ஆனால் அதை அழிப்பதற்கு ஐந்து நிமிடங்கள் போதும்.

-வாரன் பப்ட்.

  • எத்தனை புயல்களை நீ சமாளித்துக் கடந்தாயென்பது முக்கியமல்ல. கப்பலை ஒழுங்காகக் கரை சேர்த்தாயா என்பதே முக்கியம்.

-வில்லியம் மீக்லி.

  • பொய்யை எப்பொழதும் துரத்திக் கொண்டு ஓடாதீர்கள். நீங்கள் அதை விட்டு விட்டால், விரைவில் அது தானாகவே செத்து விடும்.

-இ.நாட்.

  • நிதானமாக நேசியுங்கள். நின்று நிலைக்கும் நேசம் அதுதான். மிக வேகமாக வரும் நேசமும், மிக மந்தமாக வரும் நேசமும் நிறைவு தராது.

-ஷேக்ஸ்பியர்.

  • ஒரு காலை மேலே தூக்க வேண்டுமென்றால் இன்னொரு காலை கீழே வைக்க வேண்டிய நிலை ஏற்படும்.

-டேவ் வெய்ன்பாம்.

  • முன்னேற்றத்தை நோக்கி அது எத்தனை சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை. ஒரு அடி எடுத்து வையுங்கள்.

-நெப்போலியன் ஹில்.

  • நிழலைக் கண்டு அஞ்சாதீர்கள், மிக அருகிலேயே வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் அர்த்தம்.

-ருத்ரெங்கல்.

  • எதிர்காலம் குறித்த கனவு, அதை அடைவதற்கான உழைப்பு இரண்டும் சேர்ந்தால் அதுதான் வெற்றிக் கூட்டணி.

-வில்லியம் லாங்க் குட்.

  • நிரந்தரமான நன்மையைக் கைவிட்டுத் தற்காலிக நன்மைகளை நாடுவது தலை சிறந்த முட்டாள்தனம்.

-போவீ.

தொகுப்பு: தாமரைச்செல்வி.

முந்தைய பொன்மொழிகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.