........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

பொன் மொழிகள்

வாழ்க்கையில் நம்பிக்கைதான்...?

  • புத்தகத்தில் உலகத்தைப் படிப்பது அறிவை வளர்க்கும். உலகத்தையே புத்தகமாகப் படிப்பது அனுபவத்தை வளர்க்கும்.

    -கலைஞர். மு.கருணாநிதி.

  • செல்வம் பெருகப் பெருக அதில் ஆர்வம் அதிகமாவது போல, அறிவு பெருகப் பெருக அதில் ஆர்வம் அதிகமாக வளரும்.      

-எச்.மூர்.

  • உங்களைக் காட்டிலும் கெட்டிக்காரர்கள் உங்களைச் சுற்றி இருக்க வேண்டும். அல்லது உங்களைக் காட்டிலும் கெட்டிக்காரரைச் சுற்றி நீங்கள் இருக்க வேண்டும். அது தான் வெற்றிக்கு வழி.

-பாங்க்கில்.

  • எல்லாம் போய்விட்டது என்று சோர்ந்து போய் விடாதீர்கள். எந்த மனிதனாலும் வெல்ல முடியாத மனவலிமை இருக்கிறது. அதை மூலதனமாக வைத்துக் கொண்டு உழையுங்கள். வளம் பெறலாம்.

-மில்டன்.

  • நீங்கள் நேசிக்கப்பட வேண்டுமென்றால் , நேசிப்பதற்கு அருகதை உடையவராய் இருங்கள்.

-பெஞ்சமின் பிராங்க்ளின்.

  • செயல் எப்போதும் இன்பம் தராமல் இருக்கலாம். ஆனால் செயலின்றி ஒரு நாளும் இன்பம் உண்டாவது இல்லை.

-பெஞ்சமின் டிஸ்ரேலி.

  • பெரும்பாலான் மனிதர்களை நம்பிக்கைதான் பாதுகாத்து வாழ்க்கையில் நிற்க வைக்கிறது.

-யாரோ.

  • ஒவ்வொருவருக்கும் தேடுதல் அவசியம் தேவை. கதவைத் திறந்து பார்க்காமல், மூடிய கதவையேப் பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி வாழ முடியும்?  

-ராபர்ட்.டி.பாலர்ட்.

  • நல்லவன் ஒருவனைப் பார்த்தால், அவன் போல மாறப் பார். தீயவன் ஒருவனைப் பார்த்தால் உன் மனதைச் சோதித்துப் பார்.

-கன்பூஸியஸ்.

தொகுப்பு: தாமரைச்செல்வி.

முந்தைய பொன்மொழிகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.