........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 உலகப் பழமொழிகள்

பூனையைப் பெற மாட்டை இழக்கலாமா?

 

 • திருடன் விட்டுப் போனதை மந்திரவாதி பங்கிட்டுக் கொள்கிறான்.

  -பாரசீகம்.

 • பள்ளி மாணவன் திருடினால் ஆசிரியரைத் தூக்கிலிட வேண்டும்.

-சீனா.

 • தெளிவான புத்திக்குத் திடமான ஆரோக்கியம் வேண்டும்.

-இலத்தீன்.

 • பெண் திருமணத்திற்கு முன் அழுகிறாள். ஆண் திருமணத்திற்குப் பின் அழுகிறான்.

-போலந்து.

 • ஒரு புலி இறக்கும் போது தன் தோலை விட்டுச் செல்கிறது. ஒரு மனிதன் இறக்கும் போது தன் பெயரை விட்டுச் செல்கிறான்.  

-ஜப்பான்.

 • இளமையில் முட்டாளாயிருப்பது பாவம். வயது வந்ததும் அப்படியிருப்பது பைத்தியக்காரத்தனம்.  

-சீனா.

 • ரூபாய் நோட்டுகள் ஒலியை உண்டாக்காது. சில்லறைகள்தான் ஒலியை உண்டாக்கும்.  

-செக்.

 • அதிகப்பேச்சு , பொய் இவை இரண்டும் நெருங்கிய உறவினர்கள்.  

-ஜெர்மன்.

 • ஒருவன் நீதி கேட்கப் போராடுகிறான் என்றால், ஒரு பூனையைப் பெறுவதற்காக ஒரு மாட்டை இழக்கப் போகிறான் என்று பொருள்.  

-சீனா.

தொகுப்பு: தாமரைச்செல்வி.

முந்தைய பொன்மொழிகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.