........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

பொன்மொழிகள்

லஞ்சம் துணிந்து உள்ளே புகுந்து விடும்.

 • ஞாபாவத்திற்கு பல கருவிகள் உண்டு. ஆனால் அவற்றிற்கெல்லாம் பொருத்தமான கைப்பிடி பொய். -ஷோர்மன்.

 • பழி வாங்கும் கருத்துடையவன், பிறர் தந்த புண்ணை ஆறவிடுவதில்லை. - பேகன்

 • முன்னேற்றம் என்பது இன்றைய செயலாக்கம், நாளைய உறுதிநிலை. -எமர்சன்

 • வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக் கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை. -சாமுவேல் பட்லர்

 • இன்பம் சேர்ந்து வருவதில்லை. துன்பம் தனியே வருவதில்லை. -சேக்ஸ்பியர்

 • பயமும் தயக்கமும் உள்ளவனைத் தோல்வி தொடர்ந்து கொண்டே இருக்கும். -சாணக்கியர்

 • பொருள் உள்ள அளவு மண்ணுலகில் மதிப்பு. புண்ணியம் உள்ள அளவு விண்ணுலகில் மதிப்பு. -பகவத்கீதை

 • பெரும் அறிவாளிகள், புத்தகங்களோடு வாழ்க்கையையும் சேர்த்துப் படிக்கின்றார்கள். -வின்யூடவ்

 • பொய் சொல்வது ஆண்களுக்கு கடைசி மார்க்கம். பெண்களுக்கோ அது முதலுதவி. -கெலட்பர்ஜஸ்

 • மனிதன் உருவாவது ஒரு சிறு துளியில், அவன் அழிக்கப்படுவதும் ஒரு பொறியில்தான். -கண்ணதாசன்

 • நல்ல நூல் நிலையம் ஒன்றின் பாதிப் பகுதியைத் திரட்டினால்தான் ஒரு புத்தகம் எழுத முடியும். -ஜான்சன்

 • எல்லோரும் நீதியை விரும்புகின்றனர். ஆனால் அடுத்தவர் விசயத்தில் மட்டும் - ஆண்ட்ரு

 • முட்டாள்களின் இதயம் வாயில் உள்ளது. ஆனால் அறிவாளிகள் இதயத்தில்தான் வாய் உள்ளது. -பிராய்ஸின்

 • சிந்திக்காமல் படிப்பது வீண். படிக்காமல் சிந்திப்பது வீண். - கன்பூஷியஸ்

 • வாழத் துடிக்கும் ஆசை முதியோர்க்கு இருப்பது போல் வேறு யாருக்கும் இருக்காது. - மேரிஸ்டோபீலப்

 • நேர்மை வாயிற்கதவு அருகே நின்று தட்டுகிறது. ஆனால் லஞ்சமோ துணிந்து உள்ளே புகுகிறது. - பார்னபி ரிச்

 • நட்புதான் சுகங்களில் மட்டுமல்லாமல் துக்கத்திலும் பங்கேற்கிறது. -வைரமுத்து

 • ஒருவனுடைய லட்சியம் இதுவென்று அறிந்து விட்டால் பின் அவனைப் பற்றி அறிதல் கடினமானதன்று. -ஹோம்ஸ்

 • எல்லாம் வேடிக்கைதான் நமக்கு நடக்காமல் மற்றவர்களுக்கு நடக்கும் வரை. -வில்ரோஜர்ஸ்

 • நம்பிக்கை என்பது கண் விழித்திருக்கும் போதே காணும் கனவு -பிளினி

 • தாய்மொழியைச் செம்மையாகப் பயன்படுத்தத் தெரியாத எவனுக்கும் பிற மொழிகளில் புலமை வராது. -பெர்னாட்ஷா

 • நாணயத்தை இழந்தவன் இழப்பதற்கு வேறொன்றும் இல்லாதவன். -விலி

 • ஒரு மனிதனின் சிறந்த நண்பர்கள் அவனது பத்து விரல்களே. -ராபர்ட் கோலியன்

 • ஒரு வினாடியில் நாம் செய்யும் தவறு, வாழ்க்கை முழுவதும் வேதனை தேடி வருகிறது. -சிங்சவ்

 • சும்மாயிருந்து துருப்பிடித்து அழிவதை விட, உழைத்துத் தேய்வது சிறந்தது. - ரிச்சார்ட்.

தொகுப்பு: தேனி.எஸ்.மாரியப்பன்.

தேனி.எஸ்.மாரியப்பன் அவர்களின் இதர படைப்புகள

    முந்தைய பொன்மொழிகள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு