........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

பொன்மொழிகள்

காதல் என்பது...?

  • காதல் எனும் வீணையில் மனிதன் ஒரு தந்தியைப் போன்றவன்.

- மாக்ஸிம்

  • காதலின் முடிவுக்கு எல்லா உணர்ச்சிகளும் தலை வணங்குகின்றன.

- சிசரோ

  • காதலென்பது தேவலோகத்து வஸ்து. இவ்வுலகத்து வாழ்க்கை மாறிய போதிலும் அது மாறாது.

- மாண்டேஸகியு.

  • காதல் பெரிய சூதாட்டம். சகலத்தையும் துறக்கத் தயாராக இருப்பவர்களே அதில் துணிந்து இறங்கலாம்.

- அம்பிரோஸ் பியர்டிஸ்

  • காதலிக்கும் போது ஒவ்வொரு மனிதனும் கவிஞனாகவே இருக்கிறான்.

- எபிக்பீடஸ்

  • காதல் ஒரு பொறியாகத்தான் நெஞ்சில் இருக்கிறது. ஆனால் அது நாவிலோ பெருங்கதையாய் இருக்கிறது.

-பிராங்க்ளின்.

  • அழகிய பெண்ணும் அவள் அளிக்கும் காதலும் உலகை அழியாமல் காத்து வருகிறது.

- ஆர்தர் பிரிஸ்டேன்.

  • காதல் என்பது கண நேர உணர்ச்சியல்ல. காலமெல்லாம் தொடர வேண்டிய அன்புப் பயணம்

- மாத்யூஸ்.

  • காதல் என்பது இருவர் மனம் விரிந்து சுருதியில் சேர்ந்த சங்கீதம் போன்றது.

-கிறிஸ்டபர்.

  • காதல் எதையும் பொருட்படுத்தாது. ஆனால் தன்னை மட்டும் அலட்சியம் செய்தால் அதற்குப் பொறுக்காது.

-பாஸ்கல்.

  • காதல் அறிவை விட உயர்வானது. செல்வத்தை விட ஆபூர்வமானது.

- ஹென்றி டேவிட்

  • காதலைத் தடுத்தால் அணையப் போகும் தீபத்தை தூண்டிவிட்டது போல் ஆகி விடும்.

-ஸிஸிலர்

  • காதலை யாரும் கற்றுக் கொடுக்க முடியாது. தன்னை அறியாமலே வருவது.

-ஸைரஸ்

  • காதலுக்கு அடுத்தபடியாக மனித உள்ளத்தில் தோன்றக் கூடிய தெய்வீக உணர்ச்சி இரக்கம்.

-பர்க்.

தொகுப்பு: தேனி.எஸ்.மாரியப்பன்.

தேனி.எஸ்.மாரியப்பன் அவர்களின் இதர படைப்புகள

    முந்தைய பொன்மொழிகள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு