........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

பொன்மொழிகள்

தேர்வு அறிவை வளர்க்குமா...?

  • மதம் ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்கப் பெருமூச்சாகவும் இதயமற்ற உலகின் இதயமாகவும், ஆன்மா இல்லாத நிலைமைகளின் ஆன்மாகவும் உள்ளது. மதம் மக்களுக்கு அபினி.

-கார்ல் மார்க்ஸ்

  • இறந்த காலத்துக்கும் வருங்காலத்துக்கும் இடையே மரணத்துக்கான போராட்டம்தான் புரட்சி!

- பிடல் காஸ்ட்ரோ

  • அடிமைக்கும் அடிமைப்படுத்துபவனுக்கும் இடையே சமரசத்தை உண்டு பண்ணுவது என்பது எதிர்ப்பு உணர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்ற கேவலமான சூழ்ச்சியே ஆகும். அது புரட்சி அல்ல.

 - மாக்ஸிம் கார்க்கி

  • எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும், நீங்கள் தாங்கித் தாங்கி வலுவைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

-அறிஞர் அண்ணா
 

  • தேர்வு முறை என்பது அறியாமையை அளக்கிற அளவுகோல் தானே தவிர அறிவை அளக்கும் அளவுகோல் அல்ல.

- கவிஞர் வைரமுத்து

  • நம் உள்ளொளியின் மீது படியும் அன்றாட வாழ்வின் புழுதியைக் கழுவிடும் கலையே ஓவியம்

- பிக்காசோ

  • அறிவியல் கருத்தாக்கங்களில், ஆயிரம் நபர்களின் அதிகாரம் ஒன்றுக்கும் உதவாது. ஆனால், ஒருவனின் பகுத்தறிவு மிக முக்கியப் பங்களிக்கும்.

-கலிலியோ கலிலி

  • எந்தவொரு அறிவுள்ள முட்டாளும் விஷயங்களை பெரிதாகவும் சிக்கலானதாகவும் செய்திட இயலும். ஆனால், ஒரு மேதையால் மட்டுமே அதற்கு எதிராக செய்ய முடியும்.

-ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

  • எந்த ஒரு சக்தியையும் புதிதாக உண்டாக்க முடியாது. ஏற்கனவே உள்ள சக்தியைத்தான் வேறு திசைக்கு நாம் திருப்பிவிட முடியும். எனவே, நமது கைகளில் ஏற்கனவே உள்ள மாபெரும் ஆற்றல்களை அடக்கி ஆள நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை மனதின் வலிமையைக் கொண்டு வெறும் மிருக சக்தியாக இருப்பதற்கு பதிலாக, ஆன்மிகச் சக்தியாக இருக்கச் செய். பிரம்மச்சரியம் தான் எல்லா ஒழுக்கங்களுக்கும், எல்லா மதங்களுக்கும் அடித்தளமாக விளங்குகிறது என்பது இதனின்று தெளிவாகிறது.

-சுவாமி விவேகானந்தர்

  • மனச்சாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக் குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது!

-கலைஞர் கருணாநிதி

  • ஒவ்வொரு பேரறிவு-மிக்க செயல்களிலும் நாம் ஒதுக்கித்தள்ளிய நம் எண்ணங்களைக் காணலாம்; ஒருவித அயன்மை மிடுக்குடன் நம்மையே அவை வந்தடையும்.

-எமர்சன்

  • எனக்கு முட்டாள்கள் செய்யும் பரிசோதனைகள் பிடிக்கும். நான் அதை தான் எப்பொழுதும் செய்கிறேன்.

-சார்லஸ் டார்வின

  • பகையுணர்வால் அழிவுதான் உண்டாகுமே ஒழிய ஆக்கத்திற்கு வழியில்லை. அன்போ அனைத்தையும் ஆக்குமே ஒழிய எதையும் அழிப்பதில்லை.

-மகாத்மா காந்தி

  • நூறு அறிவாளிகளுடன் மோதுவதைவிட ஒரு மூடனோடு மோதுவது மிகச் சிரமமானது

-பெரியார்

  • புரட்சி என்பது மாலை நேர விருந்துண்ணலோ பூத்தையல் வேலைப்பாடோ அல்ல. அது அவ்வளவு இலகுவாகவும் மென்மையாகவும் இருக்கமுடியாது

-மாவோ

தொகுப்பு: தாமரைச்செல்வி.

    முந்தைய பொன்மொழிகள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு