........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

பொன்மொழிகள்

எந்தக் கை மேலானது...?

  • பணிவு மாத்திரமே கட்டளையிடுவதற்கும் உரிமை அளிக்கின்றது. -எமர்ஸன்.

  • புவி என்பது ஒரு தேசம். மனித இனத்தவர் அதன் பிரசைகள். -பஹாவுல்லாஹ்.

  • ஏழைகளுக்கு சிக்கனம் ஆன்மீகமாகும். -மகாத்மா காந்தி.

  • காதல் என்பது ஒரு மலர். கல்யாணம் என்பது ஒரு பழம். -பின்னிஷ் பழமொழி.

  • தீய பழக்கங்கள் நல்ல ஒழுக்கங்களைக் கெடுத்து விடும். -பர்திரிஹரி.

  • மரணிப்பதை விட வேதனைப்படுவதற்கு அதிகத் துணிவு வேண்டும். -நெப்போலியன்.

  • மிகச்சிறந்த நூல்களை முதலாவதாக வாசித்துக் கொள்; அன்றேல்,அவற்றை அறவே வாசித்துக் கொள்ள வாய்ப்புக் கிடைக்காமற் போகும். -தோரியு.

  • நற்செயலின் ஒரே வெகுமதி நற்செயலே. -எமர்ஸன்.

  • செல்வம் அதன் உடைமைக்காரனுக்குச் சேவை செய்யும். அன்றேல்,அவனை ஆட்சி செய்யும்.
    -ஹொரேஸ்.

  • குருடனும், பார்வையுள்ளவனும், இருளும் - ஒளியும், நிழலும் - வெப்பமும் சமமாகாது. -திருக்குர்ஆன்.

  • மூடன் தான் புத்திசாலி என நினைக்கின்றான். ஆனால், புத்திசாலி தான் ஒரு மூடன் எனத் தெரிந்து கொள்கின்றான். -ஷேக்ஸ்பியர்

  • ஆண்கள் வாழ்க்கையை ஆரம்பத்திலேயே தெரிந்து கொள்கின்றனர். ஆனால், பெண்கள் வாழ்க்கையை மிகவும் தாமதமாகவே தெரிந்து கொள்கின்றனர். -வில்டி

  • நீ அறியாமையில் இருக்கிறாய்” என்ற உணர்வுடன் இருப்பது நீ அறிவை அடைய மேற்கொள்ளும் ஒரு பெரும் நடவடிக்கையாகும். -டிஸ்ரேலி.

  • நெருப்பை விறகு தின்பது போல பொறாமையானது நற்காரியங்களைத் தின்று விடும்.-முஹம்மது நபி(ஸல்)

  • இரும்பு இரும்பைக் கூர்மையாக்குகின்றது. அறிஞன் அறிஞனைச் செம்மைப் படுத்துகின்றான்.-தாமூத்.

  • அரைவாசி மூடர்களிலும், அரைவாசி புத்திசாலிகளிலும் ஆபத்து (மறைந்து) கிடக்கின்றது. -கோதி

  • மொழி என்பது ஒரு நகரமாகும். அதனைக் கட்டி எழுப்ப ஒவ்வொரு மனிதனும் ஒரு கல் கொண்டு வந்தான். -எமர்ஸன்.

  • ஒரு செயலை ஒரு சொல்லில் மாற்றுவதை விட, ஒரு சொல்லை ஒரு செயலில் மாற்றுவது மிகக்கடினமானது என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும். - மாக்ஸிம் கார்க்கி.

  • ஓர் இலட்சம் துப்பாக்கிகளை விட மூன்று பத்திரிகைகளுக்கு அஞ்சுகின்றேன். -நெப்போலியன்.

  • நீ ஒரு மனிதனுக்குக் கல்வி ஊட்டினால் நீ ஓர் ஆளுக்குக் கல்வி ஊட்டுகிறாய். ஆனால் நீ ஒரு பெண்ணுக்குக் கல்வி ஊட்டினால் ஒரு குடும்பத்துக்கேக் கல்வி ஊட்டுகின்றாய். -ரூபி மனிகன்

  • கொடுக்கும் கையானது வாங்கும் கையைவிட மேலானது. -முஹம்மது நபி(ஸல்)

  • உனது கரங்கள் - உனது கண்கள் - உனது குரல் - உனது சிந்தனைகள் யாவும் உனது சேவகர்கள். -லொரெட்டா யங்க்.

  • மனிதர்களைப்பற்றித் தீய எண்ணங்கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். -முஹம்மது நபி (ஸல்)

  • உங்களில் பலசாலி யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? கோபம் வரும் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவரே பலசாலியாவார். -முஹம்மது நபி(ஸல்)

  • எவரொருவர் (பிறரால் பாதிக்கப்பட்ட பின்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால் (அது) நிச்சயமாக காரியங்களில் மிக்க உறுதியானதாகும். - திருக்குர்ஆன்

தொகுப்பு: எம்.வை.எம். மீஆத், தும்புளுவாவை, இலங்கை.

கலாபூஷணம் எம்.வை.எம்.மீஆத் அவர்களது பிற படைப்புகள

    முந்தைய பொன்மொழிகள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு