........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
பொன்மொழிகள் எல்லாம் வேடிக்கைதான். எதுவரை தெரியுமா?
பகட்டு என்ற மென்மையான படுக்கையில் பல பெரிய
அரசுகள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயிருக்கின்றன. - கோயத்
கட்டுப்பாடான சீரான வழியில் நம்மை நடத்திக்
கொண்டால் பண்பு வளரும். இல்லையேல் நேர்மாறான விளைவுகளையும் உண்டாக்கும். -பிளேட்டோ.
சுமை அதிகமாகத் தோன்றத் தோன்ற நீங்கள் மேலே
ஏறிக் கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். -அனாஸி.
சொற்கள் நம் சிறந்த உடைகள் அவற்றைக் கந்தலாகவும்,
கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தக் கூடாது. -ஹியுகோ.
ஒருவனது குறிக்கோளைக் கொண்டே அவன் எத்தகையவன்
என்பதை அறிந்து கொள்ளலாம். - ஹோமர்.
துன்பம் வந்து விடுமோ என்ற பயம், துன்பத்தை விட
துயரமானது, கொடுமையானது. -ஹைஸர்.
எப்படி உடலுக்குச் சுத்தமான ஆடைகள் தேவையோ, அதே
போல் நம் உள்ளத்திற்குத் தூய்மையான நல்ல குணங்கள் தேவை. -வில்லியம் ஹாஸ்ல்ப்.
எண்ணங்கள் தாடியைப் போன்றவை. வயது வந்த
பின்புதான் அவை வளர்கின்றன. - வால்டேயர்.
ஏழை உண்மையைச் சொன்னாலும் எவரும் அவனை
நம்புவதில்லை. - மெனாஸ்டர்.
புத்தகங்கள் மனிதப் பிறவி அல்ல. ஆயினும் அவை
என்றும் உயிருடன் இருக்கின்றன. - வ.பென்னட்
நல்லகாலம் பிறக்கும் என்கிற நம்பிக்கை தவிர
நலிவோர்க்கு வேறு மருந்து கிடையாது. - சேக்ஸ்பியர்.
சிக்கனமில்லாமல் வாழ்ந்தால் சிறு குடும்பம் கூட
சீரழிந்து விடும். - உட்வெல்.
ஒருவனுடைய லட்சியம் இதுவென்று அறிந்து விட்டால்
பின் அவனைப் பற்றி அறிதல் கடினமானதன்று - ஹோம்ஸ்.
தன் பகைவனால் ஏற்படும் தீமையை விட அடக்கமில்லாத
மனமே ஒருவனுக்கு அதிக தீமையைச் செய்யும். - புத்தர்.
எல்லாம் வேடிக்கைதான் நமக்கு நடக்காமல்
மற்றவர்களுக்கு நடக்கும் வரை -வில்ரோஜர்ஸ்.
லட்சியம் இல்லா மனிதன் திசைகாட்டும் கருவி
இல்லாத கப்பலைப் போன்றவன். - ஆவ்பரி.
தாய்மொழியை செம்மையாக பயன்படுத்தத் தெரியாத
எவனுக்கும் பிறமொழியில் புலமை வராது. - பெர்னாட்ஷா.
மனமாரத் தனக்குத்தானே நம்பகமாக நடப்பதுதான்
மனிதன் இன்பம் காணும் வழி. -தாமஸ் பேகன்.
சிறிய செலவுகள் பற்றி எச்சரிக்கையாயிருங்கள்.
சிறிய ஓட்டைதான் பெரிய கப்பலையே கவிழ்த்து விடும். -பெஞ்சமின் பிராங்க்ளின்.
குழந்தைக்கு செய்ய வேண்டிய முதல் கடமை அவர்களை
மகிழ்ச்சியாய் இருக்கச் செய்வதே. - தாமஸ் கார்டிலைல்.
ஞானிகள் பிறருக்கு அடங்கவும் மாட்டார்கல். பிறரை
அடக்க முயலவும் மாட்டார்கள். -லாபுரூயர்
மனித வாழ்க்கை என்பது எண்ணுவதற்குரிய பல
திருப்பங்களைக் கொண்ட நதி. - ஹால்டன்.
வேகத்துடன் உயர்வது பெரியது அல்ல எப்போதும்
உயர்ந்தபடியே இருக்க வேண்டும் அதுவே பெரிது. -இப்தார்க்.
மனைவி என்பவள் வாலிபத்தில் காதலி. ஒரு
வயதில் தோழி, முதுமையில் தாய். -பேக்கன்.
எந்த இடத்தில் நாம் பணக்காரராய் இருந்தோமோ அந்த
இடத்தில் ஏழையாய் இருப்பது உத்தமமன்று. -பஞ்சதந்திரம்.
தொகுப்பு:
தேனி. எஸ். மாரியப்பன். |
முகப்பு |