........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
|
a |
பழமொழிகள் ஜப்பானியப் பழமொழிகள்
என்னதான் கீழே விழுந்தாலும் நல்ல மனிதர்கள்
தொடர்ந்து நடந்து
கொண்டே இருக்கிறார்கள்.
மூன்று செயல்கள் மகிழ்வான வாழ்வுக்குரியது அவை
சென்றதை மறப்பது, நிகழ் காலத்தை நேர் வழியில் செலுத்துவது, வருங்காலத்தைப் பற்றி
சிந்திப்பது.
மனிதன் பணத்தைக் கூட்டுகிறான், கடவுள் மனிதனின்
ஆயுளைக் குறைக்கிறான்.
நோய் வந்தபோது ஒருவன் - தன் உயிரைப்பற்றி
நினைக்கிறான். சுகமான போது பணத்தை பற்றி நினைக்கிறான்.
தன்னுடைய அறியாமையை ஒத்துக் கொள்கிறவன் அதை ஒரு
முறை காட்டுகிறான். அறியாமையை மறைக்கிறவன் அதை பலமுறை காட்டுகிறான்.
கல்யாணமான பின்பு சம்பாதிக்க ஆரம்பிப்பவன்
இறந்த பிறகுதான் பணக்காரனாவான்.
புகழ் என்பது நீர் மட்டம் போன்றது அது
ஒரு கட்டத்தில் பெரிதாகி பின் மறைந்து விடுகிறது.
அடக்கி வைத்திருப்பதை விட திறந்து விடுவது
மேலானது.
சத்தியம், நிதர்சனம், சகிப்புத்தன்மை
மூன்றும்தான் அறிவை வளர்க்கின்றன.
குழந்தை தன்னைத் தூக்கி வைத்திருப்பவரை அறியும்
தன்னிடம் உண்மையான அன்பு செலுத்துபவரை அறியாது.
செல்வம் இருப்பதைவிட ஒரு தொழில் இருப்பது
மேலானது.
மாமியாருக்கு மரியாதை காட்டினால்,
தினமும் மூன்று முறை வந்து சலிப்படைய செய்வாள்.
உன்னை ஒருவன் ஒரு தடவை ஏமாற்றினால் அது அவனுக்கு
அவமானம், இரண்டாவது தடவை ஏமாற்றினால் அது உனக்கு அவமானம்.
இளமையில் பட்ட அடிகள் முதுமையில்தான்
உணரப்படுகின்றன.
பறவைக்கு பயந்து விதைக்காமல் இருக்காதே.
அறிஞர்கள் ஞானத்தைத் தேடுகிறார்கள், முட்டாள்கள்
அதைப் பெற்று விட்டதாக நினைக்கிறார்கள்.
அதிர்ஷ்டத்திற்காக காத்திருப்பது மரணத்திற்காகக்
காத்திருப்பதுதான்.
ஒழுகும் கூரை, புகையடையும் கூண்டு, ஓயாமல்
சண்டையிடும் மனைவி இவை மூன்றும் ஒருவனை வீட்டை விட்டுக் கிளப்பிவிடும்.
உச்சியில் இருந்து கீழே விழுந்தவனை ஒவ்வொருவனும்
தள்ளி விடுவான்.
ஒரு கதவு மூடும்போது இன்னொரு கதவு திறக்கிறது.
தொகுப்பு: தாமரைச்செல்வி.
|
முகப்பு |