பொன்மொழிகள்
பாராட்டுக்கும் பழிக்கும் செவி
சாய்க்கலாமா?

-
இளைஞர்களே, உங்களுக்கு என்னிடம்
நம்பிக்கை இருக்குமானால், என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால்,
ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்.
-
கடவுள் இருந்தால் அவனை நாம்
காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால்
நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே
மேல்.
-
செயல் நன்று, சிந்தித்து
செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும்
நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து;
அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.
-
உலகின் குறைகளைப் பற்றி பேசாதே.
குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு
உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை
இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால்
விளைபவை அல்லவா.
-
வாழ்வும் சாவும், நன்மையும்
தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின்
இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ
தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம்.
-
பிறரது பாராட்டுக்கும்
பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.
-
இந்தியாவை முன்னேற்றமடையச்
செய்ய விரும்பினால், பாமர மக்களுக்காக நாம் வேலை செய்தாக வேண்டும்.
-
பகை, பொறாமை ஆகியவற்றை நீ
வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து
சேர்ந்துவிடும்.
-
பலவீனம் இடையறாத
சித்திரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது.
-
அடிமைகள் எல்லோருக்கும் பெரிய
சனியனாக இருப்பது பொறாமையே ஆகும்.
நமது நாட்டைப்
பிடித்த சனியனும் அதுதான்.ஏழை எளியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள்,
கல்வியறிவில்லாதவர்கள் ஆகிய இவர்களே உன்னுடைய தெய்வங்களாக விளங்கட்டும்.
-
வலிமையே மகிழ்ச்சிகரமான,
நிரந்தரமான, வளமான, அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.
-
உண்மைக்காக எதையும் துறக்கலாம்;
ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.
-
தன்னலம் சிறிதும் இல்லாமல்,
நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.
-
இரக்கம் உள்ள இதயம், சிந்தனை
ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை.
-
இளைஞனே, வலிமை, அளவற்ற வலிமை –
இதுவே இப்போது தேவை. சிறந்த லட்சியத்துடன் முறையான
வழியைப் பின்பற்றித் தைரியத்துடன் வீரனாக விளங்கு!
-
உடல் பலவீனத்தையோ, மன
பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.
-
நமது
சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை
முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம்.
-
எவனுடைய இதயம் ஏழைகளுக்காக
ரத்தம் வடிக்கிறதோ அவனையே நான் மகாத்மா என்பேன்; மற்றவர்கள் துர்
ஆத்மாக்களே.
- சுவாமி விவேகானந்தர்.
தொகுப்பு: தாமரைச்செல்வி.

முந்தைய பொன்மொழிகள் காண

|