........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

புத்தகப்பார்வை-11

பக்கம்- 88     விலை-ரூ 30.00

 

 

 

ஆச்சர்யம்! ஆனால் உண்மை

-தேனி.பொன்.கணேஷ்-

 விஜயா பதிப்பகம்
20, ராஜ வீதி,
கோயம்புத்தூர்-641 001.
தொலைபேசி : 0422-2394614, 2382614
 

பார்வை :

பொதுவாக இன்றைய காலகட்டத்தில், தொலைக்காட்சி ஊடகங்கள் வந்து விட்ட பின்பு புத்தகம் வாசிக்கும் வழக்கம் வெகுவாகக் குறைந்து போய் விட்டது. மக்களிடையே, குறிப்பாக புத்தக வாசிப்பில் அதிக ஆர்வம் காட்டி வந்த பெண்கள் மத்தியில் புத்தக வாசிக்கும் வழக்கம் குறுகிப் போய் விட்டது. இதேபோல் தற்போதைய புத்தகம் வாசிப்பவர்களிடையே நாவல்கள், குறுநாவல்கள் மற்றும் கட்டுரை போன்றவைகளை வாசிக்கும் வழக்கமும் சுத்தமாகப் போய்விட்டது.

இப்போதைய நிலையில் புத்தகம் வாசிக்கும் வழக்கமுடையவர்களிடையே கூட பயணத்தின் போதும், தனிமையான சூழலில் இருக்கும் போதும்தான் புத்தகத்தை வாசிப்போம் என்கிற எண்ணம் வருகிறது. இந்த எண்ணமுடையவர்களும் புத்தகத்தில் சிறுகதை, கவிதைகள் போன்றவற்றைப் புறக்கணித்து விட்டு சிறிய அளவிலான சிரிப்புகள், துணுக்குகள், சுவையான சம்பவங்கள், ஒரு பக்க அளவிலான குட்டிக்கதைகள் போன்ற குறுகிய வட்டத்திற்குள்தான் தங்கள் வாசிப்பைக் கொண்டுள்ளார்கள்.

இவர்களையாவது தங்கள் பக்கம் இழுத்துக் கொள்வோம் என்கிற முயற்சியில்தான் தற்போதைய புத்தக வெளியீட்டாளர்கள் புத்தகங்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்த வரிசையில்தான் "ஆச்சர்யம்! ஆனால் உண்மை" என்கிற நூலை கோயம்புத்தூர் விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

ஒரு சில தகவல்களை நாம் கேட்கும்போது, "இப்படியெல்லாம் நடந்திருக்குமா?" என்று ஆச்சரியப்பட்டுப் போகிறோம்.

"ஆக்ஸ்போர்டு பேராசிரியர் ஜேம்ஸ் முரே அகராதியைத் தொகுத்துக் கொண்டிருந்த போது டாக்டர் மைனர்ஸ் என்பவரிடமிருந்து உருப்படியான யோசனைகளும் புதிய வார்த்தைகளும் அதன் அர்த்தங்களையும் பற்றித் தொடர்ந்து கடிதங்கள் வந்து கொண்டிருந்தன.

அவருக்கு நேரில் நன்றி தெரிவிப்பதற்காக குறிப்பிட்டிருந்த விலாசத்துக்கு சென்ற பேராசிரியருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அது ஒரு பைத்தியக்காரர் விடுதி. அதிகாரியைக் கண்டு பேசினார்.

டாக்டர் மைனர்ஸ் புத்தி பிசகி ஒருவரைக் கொன்று விட்டதாகவும் சிகிச்சைக்காக அங்கு இருப்பதும் தெரிய வந்தது.

விடுதியில் ஓயாமல் படித்துக் கொண்டிருந்த மைனர்ஸ் தமக்குத் தோன்றிய வார்த்தைகளை ஜேம்ஸ் முரேக்கு எழுதியனுப்பிக் கொண்டிருந்தார். இதிலென்ன ஆச்சர்யம் என்றால் மைனர்ஸ் கண்டுபிடித்த ஆயிரக்கணக்கான வார்த்தைகள் ஆக்ஸ்போர்டு அகராதியில் உள்ளன.”

-இப்படி
பல ஆச்சரியமான தகவல்களைத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார் இந்நூலாசிரியர் தேனி.பொன்.கணேஷ். இந்நூல் பொழுது போக்கிற்கானது என்றாலும் 115 ஆச்சரியமான தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது.

 

-தாமரைச்செல்வி.

 

முந்தைய புத்தகப்பார்வை காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.