|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
|
a |
|
|
a |
|
|
புத்தகப்பார்வை-12
பக்கம்- 200 விலை-ரூ 80.00 |
அம்மா அப்பா ஆகணுமா?
-டாக்டர் டி.காமராஜ்-
- டாக்டர் கே.எஸ்.ஜெயராணி- எழுத்து வடிவம்: ஆர்.ப்ரியா
கிழக்கு பதிப்பகம் |
|
பார்வை :
திருமணமான தம்பதிகளுக்கு வரும் முதல் ஆசை தங்களுக்கென்று குழந்தை
பெற்றுக் கொள்ள வேண்டும், தாங்களும் அம்மா -அப்பா ஆகணும் என்பதாகத்தானிருக்கும்.
அந்தக் காலத்தில் அதிகக் குழந்தை பெற்றவர்கள் சிறந்த தம்பதியர்களாகத் தேர்வு
செய்யப்பட்டு பரிசு வழங்கிப் பாராட்டப்பட்டார்கள். "தாய்க்குத் தலைமகன்,
தந்தைக்கு இளைய மகன்" என்று வழக்கு மொழி ஒன்று சொல்லப்படுவது உண்டு. இதற்கு
மறைந்த ஆன்மீகச் சொற்பொழிவாளர் திருமுருக கிருபானந்த வாரியார் ஒரு அருமையான
விளக்கம் கூடச் சொல்லியிருக்கிறார்.
இப்படி குழந்தைகள் பெறுவது தாய் தந்தைக்கு
மகிழ்ச்சிக்குரியதாகவும், அவர்களை ஆண்-பெண் என்று உறுதிப்படுத்தி விட்டதாகவும்,
அவர்களுடைய சந்ததித் தொடர் நிகழ்ந்து விட்டதாகவும்
நினைக்கிறார்கள். அந்த அளவிற்கு குழந்தைப் பேறு தொடர்கதையாக இருந்த காலம்
இப்போது காணாமல் போய் விட்டது. இப்போதெல்லாம் "ஆண் ஒன்று, பெண் ஒன்று" என
இரண்டாக இருந்தது கூட மாறி விட்டது. "ஆணோ, பெண்ணோ குழந்தை ஒன்றே போதும்" என்று
ஒன்றோடு நிறுத்திக் கொள்ளும் வழக்கம் வந்து விட்டது.
-தாமரைச்செல்வி.
|
|
| முகப்பு | |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.