........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

புத்தகப்பார்வை-14

பக்கம்- 152     விலை-ரூ 43.00

 

 

 

சின்ன சின்ன ஆன்மீகக் கதைகள்  

-தேனி.பொன்.கணேஷ்-

 விஜயா பதிப்பகம்
20, ராஜ வீதி,
கோயம்புத்தூர்-641 001.
தொலைபேசி : 0422-2394614, 2382614.

 

பார்வை :

காலங்காலமாக தாத்தாவும் பாட்டியும் தங்கள் பேரக்குழந்தைகளுக்கு வீரதீரக்கதைகள், ஆன்மீகக் கதைகள் என்று சொல்லி வந்த குட்டிக்கதைகள் வாழ்க்கைக்கான நல்வழியைக் கற்பித்து வந்தது. தற்போதெல்லாம் அந்த நிலை அப்படியே மாறிப் போய்விட்டது. இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொலைக்காட்சிகளில் முடங்கிப் போய் விட்டார்கள். குழந்தைகள் தங்கள் தாத்தா, பாட்டிகளிடம் கதைகளைக் கேட்பதுமில்லை, அவர்களுக்கும் கதை சொல்லும் அளவிற்கு கதைகள் எதுவும் ஞாபகத்திலும் இல்லை. பள்ளிப் பாடத்திட்டங்களில் கூட பாட்டி வடை சுட்ட கதைகள் எல்லாம் காணாமல் போய்விட்டது.

 

இந்தக் குட்டிக்கதைகளில் ஆன்மீகத் தொடர்புடைய பல குட்டிக்கதைகளைத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார் தேனி பொன்.கணேஷ். இந்த நூலை கோயம்புத்தூர், விஜயா பதிப்பகம்  வெளியிட்டிருக்கிறது. நூலாசிரியர் தான் தொகுத்த இந்தக் குட்டிக்கதைகளை படிக்க விறுவிறுப்பாக இருக்கும்படி எழுத்து நடையை அமைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

 

கடுமையான விஷயத்தைக் கூட எளிமையான முறையில் இந்தக் குட்டிக்கதைகள் விளக்கி விடுகின்றன என்பதால் இன்றைய அரசியல் மேடைகளிலும், ஆன்மீகச் சொற்பொழிவுகளிலும் குட்டிக்கதைகள் பேச்சாளர்களால் நினைவு படுத்தப்படுகிறது. எனவே பேச்சாளர்களுக்கும், பேரக்குழந்தைகளுக்கு நல்ல கதைகளைச் சொல்ல விரும்பும் தாத்தா-பாட்டிகளுக்கும் இந்த சின்னச் சின்ன ஆன்மீகக் கதைகள் உதவும்.

 

 

-தாமரைச்செல்வி.

முந்தைய புத்தகப்பார்வை காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.