........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

புத்தகப்பார்வை-15

பக்கம்- 156     விலை-?

 என்னதான் சொல்கிறது நம்ம திருக்குறள் தெரிஞ்சுக்கலாமா...

"குடும்பத்தைப் பற்றி..."

-த.தங்கமணி-

 செல்வம் பதிப்பகம்
A.P.1243, 77 வது தெரு,
12-வது செக்டார்,
கே.கே.நகர்,
சென்னை-600 078.
மின்னஞ்சல்: thangamanit@yahoo.co.in

பார்வை :

திருக்குறளில் எக்காலத்திற்கும் ஏற்ற நல்ல கருத்துக்கள் இருக்கின்றன என்று எல்லோரும் சொல்லிக் கொள்கிறோம். ஆனால் திருக்குறள் தற்போது பள்ளிக்கூடங்களில் தமிழ்பாடத்தில் மனப்பாடப் பகுதியாகவும், அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ஒரு வாசகமாகவும் மட்டுமே இருந்து வருகிறது.

இந்தத் திருக்குறளை எப்படிச் சொன்னால் எல்லோருக்கும் புரியும் என்று பலரும் பல வடிவங்களில் விளக்கவுரைகளை எழுதி விட்டார்கள். இந்த வரிசையில், இந்நூலாசிரியர் த.தங்கமணியும் ஒரு வித்தியாசமான வடிவில் திருக்குறளுக்கு விளக்கம் தந்திருக்கிறார். ஒரு பொறியாளரான இந்நூலாசிரியருக்கு திருக்குறள் மீது உள்ள அக்கறை நம்மை வியப்படைய வைக்கிறது.

ஒவ்வொரு குறளுக்கும் தனித்தனியான கேள்விகளை உருவாக்கி , அதற்கு குறள் வழியிலான விளக்கமான பதிலையும் தந்து பின்பு அந்த குறளையும் குறிப்பிடுகிறார். இப்படி தொடர்ச்சியான கேள்வி-பதில்கள்-குறள்கள் என்று இருப்பதால் படிப்பதற்கு சுவையாக இருக்கிறது. "என்னதான் சொல்கிறது நம்ம திருக்குறள் தெரிஞ்சுக்கலாமா..." என்கிற பெரிய தலைப்பின் கீழ் பத்து பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளதில் ஒரு பாகம்தான் இந்த "குடும்பத்தைப் பற்றி..." நூல்.

இந்நூலில் குடும்ப வாழ்க்கை, துறவு வாழ்க்கை - இவற்றில் எது சிறந்தது? என்பதில் துவங்கி மனைவி, பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள் என்ற உறவுகளுடன், குடும்பத்திற்குத் தேவையான பணம், நட்பு ,உதவி போன்றவைகளைப் பெற்று, பெரியோர்களை மதித்து, அவர்கள் துணையுடன் குடும்பப் பெருமைகளை தொடர்ந்து காப்பாற்றுவது எப்படி? என்பது பற்றி , அதாவது "குடும்பத்தைப் பற்றி..." மட்டும் உள்ள 124 திருக்குறளுக்கு விளக்கமளித்து இருக்கிறார்.
 

ென்னை, செல்வம் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூல் எளிமையாக இருப்பதால் அனைத்து பள்ளி நூலகங்களுக்கும் நல்ல பயனளிக்கும். குடும்ப வாழ்க்கையில் அக்கறையுடைய அனைவரும் வாங்கலாம், படிக்கலாம். மேலும் கையடக்கப் பதிப்பாக இருப்பதால் பயணத்துணையாக வாசிக்கலாம், வாழ்க்கைத் துணையாக வைத்துக் கொள்ளலாம்.

 

-தாமரைச்செல்வி.

முந்தைய புத்தகப்பார்வை காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.