........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

புத்தகப்பார்வை-18

பக்கம்- 320    விலை-ரூ 125.00

 

 

தகவல் தொடர்புக் கலை

-டாக்டர் அ.விநாயகமூர்த்தி-

 பாலமுருகன் பதிப்பகம்,
63, புதுத்தெரு,
செங்குட்டை,
காட்பாடி- 632 007,
வேலூர் மாவட்டம்.

 

பார்வை :

தகவல் தொடர்புகள் குறித்து ஆங்கிலத்தில் பல நூல்கள் இருந்தாலும், தமிழில் தகவல் தொடர்பு குறித்த நூலில்லாத குறை இருந்து வந்தது. இந்தக் குறையை மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பதிப்புத்துறைத் தலைவராகப் பணிபுரிந்த பேராசிரியர் டாக்டர் அ.விநாயகமூர்த்தி தன்னுடைய தகவல் தொடர்புக் கலை என்ற நூல் மூலம் போக்கியிருக்கிறார்.


மனிதன் தோன்றிய காலத்திலேயே இந்த தகவல் தொடர்பும் பிறந்து விட்டது. ஒலி எழுப்பி முதல் தகவல் தொடர்பை துவக்கிய மனிதன் கல்வெட்டு, ஓலைச்சுவடி, செப்பேடுகள் போன்றவற்றின் மூலமாகவும் இயல், இசை நாடகங்கள் மூலம் கருத்துக்களை பிறருக்கு வெளிப்படுத்தினான். அதன் பின்பு இந்த தகவல் தொடர்பு அச்சடித்த காகிதங்கள், புத்தகங்கள், பத்திரிகைகள் என்று சிறிது வளர்ந்தது. விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப, தபால், தந்தி, தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி என்று தகவல் தொடர்பு சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தகவல்களை உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்த்தது. இதன் மூலம் தகவல் தொடர்புத் துறையில் ஒரு புதிய அத்தியாயம் துவங்கப்பட்டது. ஆனால் இன்று கம்ப்யூட்டர் உதவியுடன் புதிய தகவல் தொடர்புகள் உருவாக்கப்பட்டு விட்டன. செல்போன், இணையத்தின் வழியாக பேசிக் கொள்தல், மின்னஞ்சல், மின்னிதழ்கள் என்று தகவல் தொடர்பை, ஏன் உலகத்தையே உள்ளங்கையில் சுருக்கிக் கொண்டு விட்டது. மேலும் இந்த தகவல் தொடர்பில் எழுத்து, பேச்சுகளின் பங்கு, விளம்பரங்களின் தாக்கம், தொழில்நுட்பம், இதற்கான சட்டங்கள் போன்றவையும் தனித் தலைப்புகளில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.


வேலூர் மாவட்டம், காட்பாடியிலுள்ள பாலமுருகன் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூல் இதழியல், விளம்பரவியல், மக்கள் தொடர்பியல் மற்றும் ஊடக அறிவியல் துறை கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கு பயனுள்ள புத்தகம்.
 

   -தாமரைச்செல்வி.

முந்தைய புத்தகப்பார்வை காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.