........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

புத்தகப்பார்வை-21

பக்கம்- 128     விலை-ரூ 60.00

 

யோகா கற்றுக் கொள்ளுங்கள்

-கணபதி ராமகிருஷ்ணன்-

 கிழக்கு பதிப்பகம்
- நலம் வெளியீடு -
(Nalam , An imprint of New Horizon Media Pvt. Ltd.,)
33/15, எல்டாம்ஸ் ரோடு,
2 வது தளம், ஆழ்வார் பேட்டை,
சென்னை-600 018.
தொலைபேசி : 044-42009601, 42009603, 42009604
தொலைநகல் : 044-43009701
e-mail: support@nhm.in

பார்வை :

இன்றைய மனித வாழ்க்கையில் பலருக்கும் பணம் சேர்க்க வேண்டும் என்கிற ஆசை வந்து, அந்த ஆர்வத்தில், பலரும் தவறான பாதையைத் தேர்வு செய்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஓட்டத்தில் தோன்றும் மன அழுத்தங்கள், உடல் உபாதைகள் போன்றவை அவர்களை முப்பத்தைந்து வயதிற்குள்ளாகவே மாத்திரை, மருந்துகளின் துணையின்றி வாழ முடியாது என்கிற நிலையில் கொண்டு போய் விட்டு விடுகிறது. இந்த நிலைக்குப் போய் விட்டவர்கள் நம்மை இந்த மருந்து மாத்திரைகளிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியாதா? என்று ஏங்கித் தவிக்கும் போது அவர்களுக்கு கை கொடுக்கிறது இந்த யோகா.


பதஞ்சலி முனிவர் இவ்வுலகுக்கு அளித்த மிகப்பெரிய பரிசு யோகா எனும் இந்த அற்புதக்கலை. யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணா, தியானம், சமாதி என்கிற எட்டு உட்பிரிவுகளைக் கொண்ட யோகா எனும் மகாசமுத்திரத்தில் இருந்து ஆசனம், பிராணாயாமம், தியானம் என்கிற மூன்றை எடுத்து அதிலும் குறிப்பாக சில பகுதிகளை மட்டும் எளிமையாக, அழகான செயல்முறைகளுடன் விளக்கம் அளித்திருக்கிறார் இந்நூலாசிரியர்


உடல், மனம், ஆன்மா இம்மூன்றும் சேர்ந்தால் ஒரு மனிதன் எதையும் சாதித்து விட முடியும் என்பதையும் இதன் மூலம் அவனுடைய நியாயமான ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதையும் தெளிவாக விளக்கியிருக்கிறார். ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்கிற பரவலான கருத்தாக இருந்தாலும் தேவையான ஆசைகள் தவிர்க்க முடியாதது என்பதையும் இந்நூலில் சொல்லும் இவர் இந்நூலின் வாயிலாக 69 வகையான ஆசனங்கள் மற்றும் 12 பிராணாயாமம் போன்றவைகளை படத்துடன் விளக்கியிருக்கிறார். ஒவ்வொரு ஆசனம் மற்றும் பிராணாயாமம் செய்முறை விளக்கத்தின் முடிவிலும் அதற்கான பலன்களையும் தெரிவித்திருப்பது அருமையாக இருக்கிறது.


 இந்த யோகாக் கலையை நாம் வயதான காலத்தில் அல்லது நம் உடலில் நோய்கள் வந்து விட்ட பின்பு செய்து பலனடைவதை விட இளம் வயதில் இருந்தே செய்து வந்தால் நமக்கு வரும் மன இறுக்கங்கள் தளர்ந்து, பெரும்பான்மையான நோய்கள் நம்மை அணுகாமல் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதை வலியுறுத்துகிறது இந்த கிழக்குப் பதிப்பகத்தின் நலம் வெளியீடான கணபதி ராமகிருஷ்ணன் எழுதிய யோகா கற்றுக் கொள்ளுங்கள் என்கிற இந்த நூல்.


இந்தியாவில் தோன்றிய யோகாக்கலை, இன்று உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் வேளையில், நாமும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பும் போது, நமக்கு சரியான பயிற்சியாளர் இல்லையே என்கிற நிலையைப் போக்கி உதவுகிறது.  இன்றைய காலத்தில் உடல் உழைப்பில்லாத  அலுவலகப் பணியிலிருப்பவர்கள், கணினித் துறையிலிருப்பவர்கள் கட்டாயம்
இந்த நூலை வாங்கிப் படிப்பதுடன் யோகாவையும் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு வரும் மன அழுத்தங்கள், உடல் உபாதைகள் போன்றவற்றை மாற்றிக் கொள்ள முடியும்.

    -போ.சிதம்பரம். 

  முந்தைய புத்தகப்பார்வை காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.