........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
புத்தகப்பார்வை-22
பக்கம்- 104 விலை-ரூ 35.00 |
ஆன்மீகக் குறிப்புகள்
-தேனி.எஸ்.மாரியப்பன்-
விஜயா பதிப்பகம் |
பார்வை :
இந்து மதத்தில் கடைப்பிடிக்கப்படும் ஒவ்வொரு நடைமுறைக்கும் ஒரு காரணம்
இருக்கிறது. இந்தக் காரணம் தெரியாமலேயே பல ஆன்மீகச் செயல்பாடுகளை நாம்
பெரியவங்க சொல்லியிருக்காங்க என்கிற அடிப்படையில்தான் செய்து கொண்டிருக்கிறோம்.
இந்தச் செயலுக்கான காரணத்தைத் தேடும் பொழுது அதற்கு ஒரு பெரிய கதையைச்
சொல்கிறார்கள். இந்தக் கதைகளைக் கேட்கிற அளவிற்கு நமக்கு பொறுமை இருப்பதில்லை.
இதனை மனதில் வைத்துத்தானோ என்னவோ நகைச்சுவைத் துணுக்குகள் எழுதி பெயர் பெற்ற
எழுத்தாளர் தேனி.எஸ்.மாரியப்பன்
பல ஆன்மீகச் செய்திகளை துணுக்குகளாக
ஆன்மீகக் குறிப்புகள் என்கிற பெயரில் தொகுத்து எழுதியிருக்கிறார்.
இந்து மதத்தில் உள்ள சிவபெருமான், திருமால்,
விநாயகர் போன்ற கடவுள்களுக்கும்,
இதர இந்து மதக் கடவுள்களுக்கும் பெயர் பெற்ற தலங்கள், அவர்களுக்கு உள்ள மற்ற
சிறப்புப்
பெயர்கள், அவர்களை
வழிபடும் முறைகள் மற்றும் அதற்கான
காரணங்கள் அதனால் நமக்குக் கிடைக்கும் பயன்கள் போன்ற குறிப்புகள் இந்நூலில்
அதிக அளவில் இடம் பெற்றிருக்கிறது. இதே போல்
நாம் வீடுகளில் விளக்குகள்
ஏற்றி வைப்பதற்கான முறைகள்
அவற்றால் கிடைக்கும் பயன்கள் போன்ற குறிப்புகளும் இதில் இடம் பெற்றிருக்கிறது.
கோயம்புத்தூர் விஜயா பதிப்பகம்
வெளியிட்டுள்ள ஆன்மீகக் குறிப்புகள்
எனும் இந்நூலில் சில கடவுள் வழிபாட்டுப் பாடல்களும் கூட இடம்
பெற்றிருக்கிறது. மேலும் இந்நூலில் இந்து மதத்தின் மேலான ஆன்மீகப் பற்றுடையவர்கள்
அறிந்து கொள்ளத் தேவையான பல அரிய தகவல்கள் இருக்கிறது. ஆன்மீகப்
பற்றுடையவர்கள் வாங்கிப் படிக்கலாம். |
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.