........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
புத்தகப்பார்வை-24
பக்கம்- 104 விலை-ரூ 35.00 |
காந்தியின் வாழ்க்கையில் சுவையான நிகழ்ச்சிகள்
-தேனி.எஸ்.மாரியப்பன்-
விஜயா பதிப்பகம் |
பார்வை :
இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்த
காந்தியடிகளைப் பற்றி எத்தனையோ நூல்கள் வெளியாகி இருக்கின்றன. இவருடைய
சுதந்திரப் போராட்டங்கள் வன்முறையில்லாத அஹிம்சை வழியில்
அறப்
போராட்டங்களின் மூலம்
கிடைத்தது என்பது உலகம் அறிந்த உண்மை. இவருடைய போராட்டங்கள் மட்டுமில்லை,
இவருடைய வாழ்க்கையும் கூட எளிமையான வழியில், ஆனால் அனைவருக்கும்
ஆச்சரியமளித்த உண்மை. இவருடைய வாழ்க்கையே "காந்தீயம்" என்கிற புதிய தத்துவக் கொள்கையாகி
விட்டது.
சிறு வயதில் நாம் பார்க்கும் அல்லது கேட்கும் ஏதாவது சம்பவங்கள் நம்
மனதிற்குள் அப்படியே ஆழமாகப் பதிந்து போய் விடுகிறது. அந்த பதிவு நம்மை விட்டு
விலகாமல் நமக்குள் ஒரு புதிய அத்தியாயத்தை தோற்றுவிக்கிறது. இப்படித்தான்
காந்தியடிகள் சிறு வயதில் பள்ளிக் காலத்தில் அரிச்சந்திரா நாடகத்தைப் பார்க்க, நாமும் அரிச்சந்திரனைப் போல் உண்மையே பேசும் சத்தியவானாக வாழ வேண்டும்
என்கிற உறுதியை அவருக்குள் உருவாக்கியது. இந்த உறுதியில் அவர் சிறிதும்
தவறாததால் வாழ்க்கையில் பல இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது.
இந்த இன்னல்கள் ஒரு வழியில் அவருக்கு துன்பத்தைத் தந்தாலும்
அந்தத் துன்பத்தை வெல்லக்கூடிய வழிமுறைகளைக் கண்டதுடன் அதைக் கடைப்பிடித்து
வாழ்ந்தும் காட்டினார். இந்த
மகானின் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்ச்சிகள்
சுவையானது. நகைச்சுவை எழுத்தாளர்
தேனி.எஸ்.மாரியப்பன் இந்த சுவையான நிகழ்ச்சிகளில்
சிலவற்றை மட்டும் தொகுத்து நூலாக்கியிருக்கிறார்.
கோயம்புத்தூர் விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த
"காந்தியின் வாழ்க்கையில் சுவையான நிகழ்ச்சிகள்" நூலில் சுவையான 72
நிகழ்ச்சிகளுடன் காந்தியடிகள் மரணமடைந்த
கடைசி நிகழ்வும் 73 வது நிகழ்ச்சியாக இடம் பெற்றிருக்கிறது. கடைசி
நிகழ்ச்சி சுவையானதல்ல என்றாலும் அவருடைய வாழ்க்கைப் பயணத்தின் முடிவு நம்மைப்
பாதிக்கிறது.
ஒவ்வொரு நிகழ்ச்சியின் இறுதியிலும் "மகாத்மா" என்கிற
வார்த்தைக்கு அவர் எப்படி பொருத்தமாகிறார் என்று சொல்லப்பட்டு
கடைசியாக அவர் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகி மகாத்மாவாக மாறினார்
என்பதும் சொல்லப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி
குறித்த நூல்கள் பள்ளி நூலகங்களில்
பல இருக்கலாம். இருந்தாலும் எளிய நிகழ்வுகளைக் கொண்ட இந்த நூல்
அனைத்துப் பள்ளிகளுக்கும் தேவையானது.
ஏனென்றால், பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு இந்த
நூல் சுவையானது.
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.